ரிக்ஷாகாரன் 2.0
ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா பகிர்ந்த வீடியோ ஒன்றுதான் டுவிட்டரில் ஹாட் டாக். வெறும் 24 நொடிகள் ஓடும் அந்த வீடியோ ஒரு ரிக்ஷாவைப் பற்றியது. முதியவர் ஒருவர் ரிக்ஷாவில் ஹாயாக வந்து அமர்கிறார். அவரை இழுத்துச் செல்ல நான்கு கால்களைக் கொண்ட ரோபோ ஒன்று காத்திருக்கிறது.
முதியவர் ‘‘வண்டியை எடு...’’ என்று கமெண்ட் பண்ண, வேகமாக அவரை இழுத்துச் செல்கிறது அந்த ரோபோ. இந்தக் காட்சியைத்தான் ‘எதிர்கால ரிக்ஷா’ என்ற தலைப்பில் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார் சுப்ரியா.
Comments