சென்ட்ரல்-திருப்பதி இடையே 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள்
சென்ட்ரல்-திருப்பதி இடையே 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை: சென்னை சென்ட்ரல்-திருப்பதி- சென்ட்ரல் இடையே வரும் 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே முன்பதிவு செய்த சிறப்பு ரயில் (06057) தினமும் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு அம்பத்தூர், அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு காலை 9.45மணிக்கு சென்றடையும்.
அதைப்போன்று மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து சிறப்பு ரயில் எண் (06008) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா, திருத்தணி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 1.40 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில் வரும் 19ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments