மருதாணி சிவப்பு..
#வாழ்தல்_இனிது தொடர் -சங்கீதா ராமசாமி. மருதாணி சிவப்பு. . எனக்கெல்லாம் திருவிழா, நாளு, கெழமைல கிடைக்கிற உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறைஞ்சதில்லை மருதாணி அரைக்கிற வைபவம். விரல்களில் ஆங்கங்கே மூடி போட்ட வாக்கில் அடர்த்தியாக வெச்சும், நடுவில் அழகான ஒரு பெரிய வட்டமாக வைக்கிறது மட்டுமே எனக்கான நிரந்தர வடிவமாக நான் நினைச்சிருந்தேன். ஆனா இதுதான் மருதாணி விரும்பிகளின் வடிவம்னு பிறகுதான் தெரிஞ்சது. நடுவே சில பல குட்டி வட்டங்களும் விரும்பியபடி இட்டுக்கலாம். குறிப்பிட்ட நாளுக்கு முன்கூட்டியே பச்சை மருதாணி பறிக்கிற வைபவம் தொடங்கிடும் வீட்டுல. நல்ல முத்தின இலைகளை முள் குத்தாமல், காம்பு கையோட வராமல் பறிக்கணும். ஒரே அடுக்கில் துளிர்த்து வரும் இலைகளை அழகாக, நாசூக்காக உருவி எடுக்கணும். இல்லன்னா பூக்களோ, காய்களோ இடைப்பட்டு காரியத்தை தாமதப்படுத்தும். அதோட மருதாணி பூக்கள் வேறு கொத்து கொத்தாக பூத்து அவ்விடத்தில் வாசனையை பரப்பும். அது இன்னும் கிறக்கத்தை உண்டு பண்ணி இலைகளையும் பறிக்கவிடாமல் அலைகழிப்பதாக எனக்கு தோணும். எதிர்படும் மருதாணி பூக்களை பறிச்சி தலையில் வெச்சிக...