செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை


. இது சாம்பார் சாதத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். நீங்கள் செட்டிநாடு ஸ்டைல் பிரியர் என்றால், நிச்சயம் இதுவும் உங்களுக்கு பிடிக்கும்


     . செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிமையான செய்முறையைக் காண்போம்.


. தேவையான பொருட்கள்: * காலிஃப்ளவர் - 3/4 கப் * பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... * எண்ணெய் - 2 டீஸ்பூன் * கடுகு - 1/2 டீஸ்பூன் * பூண்டு - 2 (பொடியாக நறுக்கியது) * கறிவேப்பிலை - சிறிது வறுத்து அரைப்பதற்கு... * பட்டை - 1/4 இன்ச் * கிராம்பு - 2 * மிளகு - 3/4 டீஸ்பூன் * சீரகம் - 1/2 டீஸ்பூன் * மல்லி விதைகள் - 1 டீஸ்பூன் * வர மிளகாய் - 1


          செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். * பின் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு, நீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். * பின்பு நீரை வடிகட்டி விட்டு, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். * அடுத்து, அதில் ஊற வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, மீதமுள்ள அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட்டு இறக்கினால்,


சுவையான செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெடி!


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி