நவராத்திரி பிரசாதம்: பச்சை பட்டாணி சுண்டல்
நவராத்திரி பிரசாதம்: பச்சை பட்டாணி சுண்டல்
நவராத்திரி பிரசாதமாக சத்தான சுண்டல் வகை செய்து கொடுத்து அசத்தலாம். இன்று பச்சை பட்டாணி சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பச்சை பட்டாணி சுண்டல்
சமைக்க தேவையானவை
பச்சை பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயப்பொடி - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பட்டாணியை முதல் நாளே தண்ணீரில் ஊறவை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்.
.ப.மிளகாய் மிளகாய், இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்.
குக்கரில் பச்சை பட்டாணியை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போன பின் தண்ணீரை ஒட்ட வடிய வை.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை போட்டு தாளித்து தேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த பட்டாணியை சேர்த்து வதக்கு
உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை சாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி இறக்கு.
சூடான பச்சை பட்டாணி சுண்டல் தயார்
Comments