கால தூர தேசம் கடந்தும் வாழும் ஞானி.
"
ஸ்ரீ ரங்கத்தில்
உதித்த ரங்கராஜன்,
தாய் தமிழ் அங்கராஜன்,
பாட்டெழுதும் சோலி,
எழுத
பாமரர்க்கும் லாலி,
காதலர்க்கு
உன் வரிகள் ஜாலி,
வார்த்தைகளுக்கு இல்லை
என்றும் வேலி,
உக்கிரத்தில் நீ திரிசூலி,
அன்புணர்வில்
நீ மயில் பீலி,
காற்றலையில்
வாழ்கிறாய் நீ வாலி,
நின் நாவும்
எழுத்தாணி,
கற்பகம் தந்த பொற்பகமேகால தூர தேசம்
கடந்தும் வாழும்
நீ ஞானி..!! "
மனமார்ந்த சிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா..
கவிமுரசு பிரவீன்
Comments