சிவப்பு அவல் பாயாசம்
நவராத்திரி ஸ்பெஷல்
சிவப்பு அவல் பாயாசம்
தேவையான பொருட்கள் :
சிவப்பு அவல் - ஒரு கப், காய்ச்சிய பால் - அரை லிட்டர், ஏலக்காய்த்தூள் - சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10.
செய்முறை :
பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் அவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும்.
இதனுடன் அவலை சேர்த்து வேக விடவும்.
அவல் முக்கால் பாகம் வெந்தவுடன் பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சிவப்பு அவல் பாயாசம் ரெடி.
V.ஜான்சி ராணி
Comments