பாரதியே எங்கே போனாய் எழுந்துவா
அலைகள்
கால்கள் மட்டுமே நனைக்கும்
என்பது
பேதைகள் நம்பிக்கை
கணுக்காலுக்கு கீழே
கட்டுண்டு கிடக்க
சிற்றலைகளின் எச்ச நீரல்ல பெண்
பேராழிகளின் உக்கிரம்
பேசும் பேரலைகள்
பாரதி பிறந்த மண்ணில்தான்
பெண் கொடுமை
பெண்ணுக்கு வன்கொடுமை
இங்கே
பெண் பிறப்பு என்றாலே
சிறுமியை கூட
சிதைத்துவிடும் கொடுமை
எங்கள் பாரதியே
எங்கே போனாய்
எழுந்துவா
பெண் கொடுமை செய்யும்
இந்த மானுடத்தை எதிர்க்க
ஆயிரம் பாரதியாய்
பிறந்து வா
இவர்களை எரிக்க வா
எங்கள் பெண் குலத்தை
புதுமை பெண்ணாக
மாற்ற வேண்டாம்
புயலாகவும் மாற்ற வேண்டாம்
எரிமலையாக மாற்றிவிட்டு செல்
எரிக்கட்டும் இவர்களை...
#மனதின்ஓசைகள்
#மஞ்சுளாயுகேஷ்
Comments