கனமழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலையில் கனமழை கொட்டியது.மேற்கூறிய சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. இதுபோல் கோயம்பேடு முதல் தாம்பரம் வரை மெயின் ரோட்டில் மழை நீர் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது. கனமழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழை அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், #chennairains ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது.சென்னையில் மழைப்பொழிவு விவரங்கள்:அண்ணாபல்ககலை., சாலையில் அதிகப்பட்சமாக 7 செ.மீ., நுங்கம்பாக்கம்: 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது
Comments