நடிகர் திலகம்
நடிகர் திலகம்
நடிப்பில் சிகரம் தொட்ட பல்கலைக்கழகம்
துடிப்பில் வியந்து பாராட்டியது உலகம்
வசனங்களில் தெளிவைத் தந்த உச்சரிப்பு
வைத்தார் திரைப்படம் மீது நாளும் மதிப்பு
ஏற்ற பாத்திரமாய் மாறிய நடிகர்திலகம்
தோற்றத்தில் நிஜமுகம் எங்குதான் போகும்
நவரசமாய் நடிப்பில் காட்டியது சாதனை
நாடக உலகம் கற்றுத்தந்த போதனை
வேகமாய் நடப்பதில் காட்டிய தனிமுத்திரை
ஏற்ற பாத்திரத்துடன் இரசிக்குமிடம் வெண்திரை
வரலாற்று தலைவர்கள் வாழ்ந்தனர் இவர் வடிவாய்
வையத்தில் கண்டனர் மக்கள் கலை வடிவாய்
அழகான முகத்தில் அற்புதம் காட்டிய சீமான்
அழகில்லையென தெய்வமகனில் அழுதிட்ட
கோமான்
குரல்வளத்தில் நாளும் வலிமையைத் தந்தார்
விரல்கள் பத்திலும் மெல்லசைவை தந்தார்
தலையாட்டுவதில் தனித்திறமையை தானாய் செய்தார்
நகம் கடிப்பதிலும் நல்லதொரு நளினம் அமைத்தார்
பாடும்போது நடிப்பில் பாவம் பிறக்கும்
வாடும் போதும் காண்போர்க்கு கண்ணீரும் சுரக்கும்
நடிப்பிற்கு முன்னுதாரணம் இவரென்றால் மறுப்பதில்லை
இவர் வழியினைத் தொடராதவர் நடிப்பில் சிறப்பதில்லை
வாழும்போது நட்சத்திரமாய் ஜொலித்தவர் அப்போது
வானிலொரு நட்சத்திரமாய் மாறிவிட்டார் இப்போது
முருக. சண்முகம்.
சென்னை
Comments