சருமத்தை சுத்தமாகவும் முகத்தை பொலிவோடும் காட்ட உதவும் சில இயற்கை வழிகள்
பெண்கள் மாதந்தோறும் தவறாமல் தங்கள் அழகிற்கு என்றே தனியாக பணத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அழகைப் பராமரிக்க அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
நம் வீட்டில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கான பராமரிப்புகள்
முகத்தின் பொலிவைக் கெடுக்கும் சரும பிரச்சனைகளை விரட்டி, சருமத்தை சுத்தமாகவும் முகத்தை பொலிவோடும் காட்ட உதவும் சில இயற்கை வழிகள்
.
புதினா புதினாவின் சாற்றினை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் பெரிய பருக்கள் இருந்தாலும் ஒரே இரவில் சுருங்கிவிடும். இல்லாவிட்டால் புதினா இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவலாம். இதனால் சருமம் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
பப்பாளி பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது காயங்களைக் குணப்படுத்த வல்லது. பப்பாளியைக் கொண்டு அடிக்கடி மாஸ்க் போட்டால், முகம் இளமையோடு இருக்கும். முக்கியமாக பப்பாளி ஃபேஸ் மாஸ்க் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. அதற்கு 1/4 கப் கொக்கோ, 2 டீஸ்பூன் க்ரீம், 1/4 கப் கனிந்த பப்பாளி கூழ், 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1/4 கப் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
வால்நட்ஸ் வால்நட்ஸ் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. முக்கியமாக வால்நட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை நீக்கக்கூடியது. அதற்கு வால்நட்ஸை அரைத்து பொடி செய்து, 2 டீஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தை நீரில் கழுவி விட்டு, பின் அந்த வால்நட்ஸ் கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியமாக கண்களைச் சுற்றி தேய்க்காதீர்கள். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். மஞ்சள் மஞ்சளில் ஆன்டி-செப்டிக் பண்புகளைத் தவிர, சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவக்கூடியது
. மஞ்சள் தூளுடன் அன்னாசி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவினால், கருவளையங்கள் குறையும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதற்கு மஞ்சள் தூளை கரும்பு சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்ய மஞ்சள் தூளுடன் சந்தன பவுடர் சேர்த்து ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும்
Comments