சமையல் எரிவாயு பதிவுக்கு நாடு முழுவதும் ஒரே செல்போன் எண்


சமையல் எரிவாயு பதிவுக்கு நாடு முழுவதும் ஒரே செல்போன்னை எண்ணை அறிமுகம் செய்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம்.



இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.



இந்நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.



அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம். இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒருமாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி