‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி


இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-


 



நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்.



பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.



காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்.


நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்



 

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி