இந்தியா-ஆஸ்திரேலிய தொடர்: போட்டி அட்டவணை
இந்தியா-ஆஸ்திரேலிய தொடர்: போட்டி அட்டவணை வெளியீடு
சிட்னி: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 3 டி.20 மற்றும் 4 டெஸ்ட்டில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கோஹ்லி தலைமையிலான அணியில் இளம்வீரர்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் காயம் காரணமாக ரோகித்சர்மா இடம்பெற வில்லை. இந்நிலையில் போட்டி அட்டவணையை ஆஸி. கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், பகலிரவு டெஸ்ட் அடிலெய்ட்டில் டிச. 17 முதல் 21ம் தேதி வரைநடைபெற உள்ளது. பாக்சிங்டே டெஸ்ட் டி.26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
போட்டி தேதி இடம்
முதல் ஒன்டே நவ. 27 சிட்னி (பகலிரவு)
2வது ஒன்டே நவ.29 சிட்னி(பகலிரவு)
3வது ஒன்டே டிச.2 கான்பெரா(பகலிரவு)
முதல் டி.20 டிச. 4 கான்பெரா
2வது டி20 டிச. 6 சிட்னி
3வது டி.20 டிச.8 சிட்னி
முதல் டெஸ்ட் டிச.17-21 அடிலெய்ட் (பகலிரவு)
2வது டெஸ்ட் டிச. 26-30 மெல்போர்ன்
3வது டெஸ்ட் ஜன.7-11 சிட்னி
4வது டெஸ்ட் ஜன. 15-19 பிரிஸ்பேன்
Comments