சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை செய்யவும் மறுக்கிறார்கள்

ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை செய்யவும் மறுக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக அரசு மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.


அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக அரசின் மீது விமர்சனங்கள் வைப்பதை தவிர்த்து வந்தார்.


இதனிடையே, தமிழக அரசு மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பியது. ஆனால், ஆளுநர் இன்னும் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது குறித்து, டாக்டர் ராமதாஸ் நேற்று (அக்டோபர் 21) தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.


இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இங்குள்ள ஆட்சியாளர்கள் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை….. செய்யவும் மறுக்கிறார்கள்” என்று திடீரென பாய்ந்து விமர்சித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி