எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?? நிம்மதியாக தூங்க வேண்டுமா??உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமா??
வாங்க பார்க்கலாம்..!
நம்ம எல்லோர்க்கும் தெரிந்தும் தெரியாமலும் நம் உடம்பினுள் சுரக்கும் செரோடோனின் ( Serotonin) இரசாயனம் இவை எல்லாவற்றுக்கும் காரணம்.
இரசாயனமா அப்படியென்றால் அது நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் அப்படியெல்லாம் இல்லை...
பருத்திவீரன் படத்தில் பிரியாமணி சண்டை போட்ட பின்னர் அழுதுட்டே சாப்பாட்டுல கறியை அள்ளிப் போட்டு சாப்பிடுற மாதிரி தான் சிலர் சோகமாக இருக்கும் போது
அதிகமாக சாப்பிடுவதை நாம் வீட்டுகளில் கூட பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த செரோடோனின் இருக்காங்களே அவங்க உங்க உடம்பில் அதிகமாக
உற்பத்தியாகும் போது அதீத ஆனந்தம் பிறக்கும்.தூக்கம் நேரத்துக்கு வரும்.உயர் இரத்த அழுத்தம் குறையும்.
அப்போ செரோடோனை எப்படி அதிகரிப்பது?
பிடித்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.உற்பத்தி உடலில் அதிகரிக்க மகிழ்ச்சியும் மன அமைதியும் பெருகும்.
ஆய்வுகளின்படி செரோடோனின் அதிகரிக்க முட்டை,பால் ,சாலமன் மீன்,நண்டு,சிவப்பு இறைச்சி,சிக்கன் இவையெல்லாம் அதிகளவில் செரோடோனை உற்பத்தி செய்கிறது என்கிறார்கள்.
ஏனென்றால்,செரோடோனை நம் உடலில் நேரடியாக புகுத்த வாய்ப்பு குறைவு என்பதால் மேலே குறிப்பிட்ட உணவுகளில் அமினோ ஆசிட் நம் உடலில் செரோடோனினை உற்பத்தி செய்யும்.
மேலும், கேரட், தக்காளி,கீரை,பீன்ஸ், பீட்ரூட் இவற்றின் மூலமாகவும் செரோடோனின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்யலாம்.
இவற்றினால் செரோடோனினை மகிழ்ச்சியான ஹார்மோன் என்று கூட அழைக்கிறார்கள்.
பொதுவாகவே பிடித்த விஷயங்களை செய்யும் போது பெரிய மகிழ்ச்சி நம்மை தொற்றிக் கொள்ளும்.
இனிமேல் கோபம் அழுகை கவலை வந்தால் உடனே சாப்பிட ஆரம்பித்து விடலாம்
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments
எப்படி இந்த கட்டுரை படிக்காமல் விட்டேன்.
மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.
உண்மை தான் பிடித்தமான உணவு உண்பதை விட மகிழ்வான நிகழ்வு ஏதுமில்லை.
அமுதமென விரும்பிய உணவை ரசித்து சாப்பிடும் பழக்கம் தொடருது.
நல்ல கட்டுரைக்கு நன்றி.