கால்பந்தாட்டத்தின் கடவுள், கருப்பு_முத்து பீலே பிறந்ததினம்
கால்பந்தாட்டத்தின் கடவுள், கருப்பு_முத்து பீலே பிறந்ததினம் இன்று
★ 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பீலே.
★ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் மொத்த ஹாட்ரிக்குகள் 92.
★காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராக கருதப்படும் அவரை #கருப்பு_முத்து' என்றும் பத்திரிக்கையாளர்கள் அழைத்தனர்.
★எங்கே வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை அவர் ஏற்றுக்கொண்டு விடுவாரோ? என்று அஞ்சிய பிரேசில் #பீலேயைத் தேசியப் புதையலாக அறிவித்தது.
★1978 ஆம் ஆண்டு அவருக்கு அனைத்துலக அமைதி பரிசு வழங்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு முடிவதற்கு இருபது ஆண்டுகள் இருந்தபோதே #பீலேவை அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அறிவித்தது அனைத்து உலக ஒலிம்பிக் குழு.
★1970 ல் லாகோஸில் பெலேவின் ஆட்டத்தை காண்பதற்காக அப்போது நைஜீரியாவில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்கள் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்தன.
நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்
Comments