Skip to main content

வி. சாந்தாராம்




 







































 











நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்த

வி. சாந்தாராம் காலமான நாளின்று


தமிழ் நாட்டில் டைரக்ஷனில் புதுமையைப் புகுத்திய ஸ்ரீதர், கே.பாலசந்தர் உள்பட பல டைரக்டர்களும், வடநாட்டில் உள்ள பல பிரபல டைரக்டர்களும் கூட, சாந்தாராமை தங்கள் வழி காட்டியாகக் கொண்டிருதாங்களாக்கும். அதையெல்லாம் விட குறிப்பாக சொல்லணுமுன்னா ‘‘படங்களை இயக்குவதற்கு என் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் வி.சாந்தாராம்’’ என்று புகழாரம் சூட்டிய எம்.ஜி.ஆர்., அவர் காலில் விழுந்து வணங்கினார் என்றால், சாந்தாராம் எப்படிப்பட்ட மாமனிதராக இருக்க வேண்டும்!

சாந்தராம் தக்கணூண்டு வயசிலேயே பாபுரா சினிமா கம்பெனியில் சேர்ந்து சினி புரொடக்‌ஷன், லேப் ஜாப் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற டெக்னாலஜிக்களைத் தெரிந்துகொண்டார்.

அப்பாலே 1929ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து ‘பிரபாத் பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

தாதா சாஹேப் பால்கே தயாரித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் கதையை 1932இல் ‘அயோத்யா கா ராஜா’ என்ற பெயரில் இயக்கி முதன் முதலில் பெண்களை நடிக்க வைத்தார். அதுக்கு முன்னடி வரை லேடீஸ் வேஷத்தில் ஜெண்ட்ஸ்கள்தான் நடிச்சு வந்தாய்ங்க என்பது குறிப்பிடத்தக்கது

மவுனப் பட காலத்திலேயே 6 படங்களை எடுத்திருந்தார். இந்தி, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 1934ஆம் ஆண்டு முதல் படம் எடுக்கத் தொடங்கினார். ‘அம்ரித் மந்தன்’ படம் மூலம் புகழ்பெற்றார். \

பெண்கள் பிரச்சினைகள் குறித்த ‘துனியா ந மானே’, பாலியல் தொழிலில் இருந்து மீள நினைக்கும் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் ‘ஆத்மி’ (1939) ஆகிய படங்களை அக்காலகட்டத்திலேயே எடுத்துக்காட்டினார். இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ‘படோஸி’ திரைப்படம் மூலம் வலியுறுத்தினார்.

1941இல் பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் தயாரிக்கப்பட்ட ‘சகுந்தலை’, வர்த்தக ரீதியில் வெளிநாட்டில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம். இவரது ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ திரைப்படம் சோஷலிச நாடுகளில் புகழ்பெற்றது.

இவரது ‘தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் 1957இல் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருது பெற்றது.

நம்ம எம்.ஜி.ஆர். இந்தப் படத்தைத் தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரிலும் இவரது ‘அப்னா தேஷ்’ படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரிலும் எடுத்தார். இவர் 1959இல் தயாரித்த ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்படம், இந்தியாவின் முதல் கலர் படமாக்கும்.

அப்பேர்ப்பட்ட சாந்தாராம் இதே அக்டோபர் 30ல் காலமானார்

 

®இன்ஃபர்மேஷன் பை✍ கட்டிங் கண்ணையா







































Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி