8நிமிடத்தில் 230 கிராமாக மாறும் 50 கிராம் அதிசய பொங்கல்

கடந்த ஞாயிறன்று மூத்த குடிமகன் ஒருவர், தான் ரயில் பயணத்தின் போது ரூ.80 கொடுத்து வாங்கிய பொங்கலின் எடை வெறும் 50 கிராம் மட்டுமே இருப்பதாகப் புகார் அளித்தார். இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது.


இந்த புகார் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், இது துரித உணவாகும். அந்த கோப்பையை பிரித்ததும், நுகர்வோர் அதில் சுடான தண்ணீரை ஊற்ற வேண்டும், சரியாக 8 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும், பிறகு அது சாப்பிடத் தயாராகிவிடும். அப்போது அந்த பொங்கல் 220 - 230 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று மிக ருசிகர பதில் அளிக்கப்பட்டுள்ளது.


திருச்சியிலிருந்து பிரதான வழித்தடத்தில் சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகளுடன் பல்லவன் ரயில் புறப்பட்டுச் சென்றது


தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ரயில் பயணிகளுக்கு துரித உணவு, நொறுக்கு தீனி, டப்பாக்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுகளை ஐஆா்சிடிசி விற்பனை செய்து வருகிறது.


இதன்படி பல்லவன் ரயிலில் ஐஆா்சிடிசி பணியாளா்கள் அந்த வகை உணவுகளை விற்றபோது, பயணி ஒருவா் காலை சிற்றுண்டிக்காக டப்பாவில் அடைக்கப்பட்டிருந்த துரித வகை பொங்கலை ரூ. 80-க்கு வாங்கினாா்.


அவா் டப்பாவை திறந்து பாா்த்தபோது 50 கிராம் அளவுக்கு வெந்நீருடன் கூடிய துரித வகை பொங்கலும், 8 மாதத்துக்கு பொங்கல் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதற்கான விவரமும் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டாா். உலா்ந்த நிலையில் உள்ள துரித பொங்கலுடன் வெந்நீரைச் சோ்த்தால்தான் உண்ணும் வகையில் பொங்கல் நெகிழ்வாக மாறுமாம்.


எப்படி, 50 கிராம் பொங்கலில் சுடுதண்ணீர் ஊற்றினால் அது 230 கிராம் பொங்கலாக மாறும் என்று பல தரப்பிலும் இருந்து கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கும் விரைவில் ரயில்வே விளக்கம் அளிக்குமா 


நாமும் நமது வீட்ல செய்து பார்க்கலாமே


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி