தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை







 

தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது

. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரிச்சு வந்துச்சு.




இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேத்திக்கு தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைச்சார்.
















நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்















 


 





 














 








Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி