பாப்லோ பிகாசோ
பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோ 1881-ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 25-ந்தேதி) பிறந்தார்.
20-ம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக ‘கியூபிசம்’ என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.
பிக்காசோ, ஹென்றி மாட்டிசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெகிழி ஓவியத்தில் புரட்சி செய்த உலகின் தலை சிறந்த ஓவியர்கள் ஆவார்கள்.
ஓவியம், சிற்பம், அச்செடுத்தல் மற்றும் செராமிக் ஓவியங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிகோலியவர்கள்.
அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் பிகாசோ ஆவார்
Comments