3 லட்சம் தீக்குச்சிகளை கொண்டு தாஜ்மகால்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 3 லட்சம் தீக்குச்சிகளை கொண்டு தாஜ்மகாலை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் குர்னி வட்டாரத்தை சேர்ந்தவர் சஹேலி பால். இவர் ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 3 லட்சம் தீக்குச்சிகளை கொண்டு தாஜ்மகாலை உருவாக்கி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் கின்னஸ் உலக சாதனை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி கடந்த ஆக.,மாதம் மத்தியில் இதற்கான பணிகளை துவக்கி செப்., 30 ம் தேதி முடித்துள்ளேன் இதற்காக இரண்டு வண்ணங்கள் கொண்ட தீக்குச்சிகளுடன், ஆறு அடி அகலம் நான்கு அடி நீளம் உள்ள பலகையில் தாஜ்மகாலை உருவாக்கியதாக கூறினார்.
தனது தந்தை சுபீர் பால் மற்றும் தாத்தா பிரேன் பால் ஆகியோர் கடந்த 1991 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் சிறந்த சிற்பங்களை வடிவமைத்தற்காக ஜனாதிபதி விருது பெற்றுள்ளனர். அவர்களின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன் என கூறினார்.
முன்னதாக கடந்த 2013 ல் 1,36,951 தீக்குச்சிகளை கொண்டு ஈரானின் மெய்சம் ரஹ்மானி உருவாக்கிய யுனெஸ்கோ சின்னம் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்தசாதனையை இளம்பெண் சஹேலிபால் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments