தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி


இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் 720 - 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுள்ளார்.



இந்நிலையில், மாணவர் ஜீவித்குமாரை தேனி ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.




மேலும் அவர் பேசுகையில், "மாணவரின் இந்த வெற்றி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரிய உந்துதலை ஏற்படுத்தியுள்ளது இவருக்கு தேவைப்படும் உதவியை மாவட்ட நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது. தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்யப்படும். இந்த வெற்றி மூலம் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்களின் பயத்தைப் போக்கி உள்ளது" என்றார்.



இந்நிலையில், தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வு எழுதிய 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மொத்தம் 6,692 பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். 

 

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்ற மாணவி 720க்கு 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 720க்கு - 552 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

 

மேலும் நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 70 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி