அயல் மொழி திரைப்படங்களில் என்னை கவர்ந்தவை தொடர்  (1) 

அயல் மொழி திரைப்படங்களில் என்னை கவர்ந்தவை
தொடர்  (1) 
இன்று 17.10.2020


டோக்கியோ ஸ்டோரி (1953)
 இயக்கம்: யஜுசிரோ ஓசு
                போருக்குப் பின்னால்  ஜப்பானிய நகரம். போரின் உக்கரத்திலிருந்து  இன்னும் அதிலிருந்து முழுமையாக மீண்டுவராத தருணம்தான் கதைக்களம்
 . தங்களின் கடலோர கிராமத்தில் கடைசி மகளுடன் வசிக்கின்றனர் வயதான தம்பதிகள். தங்கள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவர்களுக்கு நீண்ட தொலைவில் டோக்கியோ நகரத்தில் தங்கள் குடும்பங்களுடன் வசிக்கும் தங்கள் மகன், மகள் மற்றும் போரில் மாண்ட மகனின் மனைவி ஆகியோரைக் காண ஆசை வந்து டோக்யோவிற்கு ரயிலில் பயணமாகிறார்கள். அவர்களுக்கும் பல ஆண்டுகள் கழித்து தங்கள் வாரிசுகளைக் காண்பதில் மகிழ்ச்சி. வாரிசுகளுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால், தங்கள் அன்றாட பொருளீட்டும் வாழ்விலிருந்து நேரம் ஒதுக்கி பெற்றோர்களை டோக்கியோ நகரத்தைச் சுற்றிக்காட்ட அழைத்துச்செல்ல முடியவில்லை.
(இன்றும் இப்படிதான் நம்ம வாழ்க்கை என்பீர்கள் )
   மேலும், அவர்களுக்கு ஆர்வமோ, அதீத அக்கரையோ இருப்பதில்லை. ஆனால், சொந்த வாரிசுகளைக் காட்டிலும் வறுமையில் வாழ்ந்தாலும் அவர்களது ரத்த சொந்தமில்லாத மருமகள் நோரிக்கா நன்றாக கவனிக்கிறாள். அவர்களுக்கு டோக்கியோ நகரையும் சுற்றிக்காண்பிக்கிறாள். அவளது தூய்மையான உள்ளத்தைக் கண்டு நெகிழும் பெற்றோர்கள், அவள் தங்கள் மகனின் மரணத்திற்குப் பிறகு 8 ஆண்டுகளாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியே வாழ்வது குறித்து கவலையுறுகின்றனர்.
 வாரிசுகள் இணைந்து பெற்றோரை மலிவான ஸ்பா ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு பெற்றோர்களுக்கு தூக்கம் கெடுகிறது. விரைவிலேயே மகள் வீட்டிற்குத் திரும்பிவிடுகிறார்கள். இது மகளுக்கு பிடிக்கவில்லை. இப்படியே செல்லும் கதையில் ஒரு கட்டத்தில் தங்க இடமில்லாமல் அல்லல்படுகின்றனர். 
பின்னர், பெற்றோர்கள் இருவரும் யாருக்கும் தொல்லை தரவேண்டாம் என தங்கள் சொந்த கிராமத்திற்கே திரும்புகின்றனர். அங்கு கலைப்புற்றிருந்த தாய் நோய்ப்படுக்கையில் வீழ  இப்போது வாரிசுகளும், மருமகளும் டோக்கியோவிலிருந்து பெற்றோர்களின் கிராமத்திற்கு தங்கள் தாயாரைப் பார்க்க வருகிறார்கள்.


இதன் பிறகு கனத்த சில நிகழ்வுகள்
 ஆர்ப்பாட்டமில்லாமல் படம் முடியும் .
ஜப்பானிய கலாச்சாரத்தில் அமைதி முக்கிய பங்கு வகிப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். அமைதியாக இருக்கும் ஒருவரிடம் சென்று பேசிய பிறகு ‘உங்கள் அமைதியை நான் கெடுத்தற்ககாக  மன்னிப்புக்கோருகிறேன்’ என்பார்களாம். 
’டோக்கியோ ஸ்டோரி’ படம் பலருக்கு பல காரணங்களுக்காக எனக்கு பிடிக்கிறது
நமக்கு என்றும் பிடிக்கும். 
உங்களுக்கு நேரமிருப்பின் இந்த படத்தை பாருங்கள்
லிங்க் அனுப்பியுள்ளேன்
இப்படைப்பின் ’கலை அமைதி என்னை கவந்தது
 இந்தக் கலை அமைதியை இதுவரை ஜப்பானிய படங்களில் மட்டுமே காண்கிறேன்.


1953ம் வருடம் யஜுசிரோ ஓசுவின் இயக்கத்தில் வெளியான ‘டோக்கியோ ஸ்டோரி’ எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பினைத் தராத உணர்வுக்குவியல். மனிதர்களின் அக்கறையின்மை, சகிப்புத்தன்மையின்மை, உதவாமை என அக அழுக்காககவும் இருக்கலாம்.
 இப்படத்தின் தாக்கம் தான் Nobody Knows, Like father; Like Son; our Little Sister, After the Storm, Shoplifters போன்ற படங்களை இயக்கிய சமகால ஜப்பானிய சினிமாவின் முதன்மை இயக்குநர் கொரிடாவிடமும் இருக்கிறதென அடித்துக்கூறலாம்.

’திரைப்படம் தந்த காட்சி அனுபவத்தை வார்த்தைகளில் எப்படி சொல்வது மிக கடினம் இது போல  பல கேள்விகள் எழுந்தாலும். சுருக்கமாக இங்கு பகிர்ந்ததில் ஒரு மனநிறைவு ஏற்படுகிறது


Japanese theatrical release poster
Directed by Yasujirō Ozu
Produced by Takeshi Yamamoto
Written by Kōgo Noda
Yasujirō Ozu
Starring Chishū Ryū
Chieko Higashiyama
Setsuko Hara
Music by Kojun Saitō
Cinematography Yūharu Atsuta
Edited by Yoshiyasu Hamamura
Production
company Shochiku
Release date • November 3, 1953
Running time 136 minutes
Country Japan
Language Japanese
‘உமாகாந்த்
14.10.2020



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி