Posts

Showing posts from October, 2020

தேனில் இப்படி

Image
  தேனில் இப்படியா... ?       வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் சிலவற்றில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பதாகவும், இப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தேன் உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படு     கின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக குழந்தைகளுக்கு தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்கு பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. காலம்காலமாக மக்களின் நம்பிக்கையை பெற்ற தேனுக்கான மவுசு, இந்த நவீன காலத்திலும் குறையாமல்தான் இருக்கிறது. அதே நேரத்தில் வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் சிலவற்றில் ஆன்ட்டிபயாட்டி...

விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

Image
விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வரும் நிலையில் விஆர்எஸ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். முக்கியமில்லாத ஒரே பதவியில் பல ஆண்டுகளாக தமிழக அரசு வைத்திருப்பதால் சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.   அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. விஆர்எஸ்க்கு விண்ணப்பித்த சகாயம் 2 மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார். சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார்   மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி அன்னாபிஷேகம்

Image
ஐப்பசி அன்னாபிஷேகம்: 31-10-2020     திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை வயல்களின் சாய்ந்த செந்நெற்கதிர்களின் மீது சூரியன் தன் செங்கிரணங்களை வீச வயலே பொன் வேய்ந்த தகடாக ஜொலித்தது. செங்கதிர்களின் எதிரொலிப்பில் விழித்த மக்கள் வயற்காட்டை நோக்கி நடக்கலாயினர். ஆதவன் உச்சியை நெருங்கும்முன் பெரும் போராக கதிர்கள் அறுத்துக் குவித்தனர். அந்திச் சிவப்பு கீழ்வானத்தில் திரண்டு நகரும் வேளையில் குவித்த கதிர்களை தூற்றினர். நெல்மணிகளை ஒன்றாகக் குவித்தபோது அது மலையாகப் பெருகி ஆதவனையே மறைத்தது. அந்தி சரிந்து இருள் கவிழ மக்கள் குடில்கள் நோக்கித் திரும்பினர். அந்த அருளாளத் தம்பதியர் கோபுரமாகக் குவிந்திருந்த நெற்குவியலைப் பார்த்து அகமகிழ்ந்தனர். எண்ணாயிரம் அடியார்கள் வந்தாலும் கரையாது அமுது செய்யலாம் என்று மனதிற்குள் குதூகலித்தனர். சீரடியார்கள் அருளால் தம்பதியரின் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே சிவநாமச்சாரலில் ஓயாது நனைந்து, நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை அந்த திவ்ய பக்த தம்பதியர் தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்தனர். நோக்கிய இடமெல்லா...

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி

Image
Sean Connery, Scottish actor who played James Bond in 7 movies, dead at 90.   பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி இன்று 31.10.2020 (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.   உங்களுக்காக இங்கே டாக்டர் .NO

சர்தார் வல்லபாய் பட்டேல்

Image
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமின்று: இந்தியா விடுதலை அடைந்தவுடன், நாட்டிலிருந்த அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நிலப்பரப்பாக இந்தியாவை வடிவமைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஆயுதப்படைகளைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அவரது உறுதியான தலைமை காரணமாகவே அனைத்து சமஸ்தான அரசுகளும் இயல்பான ஒத்துணர்வுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. . குஜராத்தின் கேடா மாவட்டத்தில், கரம்சத் கிராமத்தில் 1875, அக்டோபர் 31ல் பிறந்த வல்லபபாய், லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பயின்று வந்தார். கோத்ரா, மும்பை, அகமதாபாத் நகர்களில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர், 1917 ல் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். மகாத்மா காந்தியின் போராட்ட வழிமுறைகளாலும் போதனைகளாலும் கவரப்பட்ட அவர் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு போராட்டங்கள், கட்சி மாநாடுகளில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக விளங்கிய படேல், 1934 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க இயலாத தலைவராக உயர்ந்தார். . விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, ...

ஹாலோவீன் தினம்

Image
ஹாலோவீன் தினமின்று   மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் ஹாலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ம் தேதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது. பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் ஹாலோவீன் தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்ச காலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான ஹாலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச் செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரஞ்சு நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்க...

தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பாராட்டு.

Image
திருத்துறைப்பூண்டியில் ஏடிஎம்மில்  பணம் எடுக்க சென்ற போது எடிஎம்மில் இருந்த  ரூ 7,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பணத்தை தவறவிட்ட பெண்ணிடம்  ஒப்படைத்து டிஎஸ்பி பழனிச்சாமி பாராட்டு.     திருத்துறைப்பூண்டி திரெளபதை அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் தாஸ் இவரது மகள் காயத்திரி  பெட்ரோல் பங்க் எஸ்பிஐ  ஏடிஎம்மில் கடந்த 13-ந்தேதி  பணம் எடுக்க சென்றார். அங்கு ஏடிஎம் மெஷினில் ஏற்கெனவே யாரோ பணம் எடுக்க முயன்று வராததால் சென்றுவிட்டனர். இதையடுத்து  அந்த பணத்தை திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் போலீஸில் ஒப்படைத்தார் . இந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பணத்தை தவறவிட்டவர்  தலைக்காடு பகுதியை சேர்ந்த கமலி என்பது தெரியவந்தது அவரிடம் ரூ 7,000  பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  துரை அவர்களின் உத்தரவின்பேரில்  திருத்துறைப்பூண்டி  காவல் துணை கண்காணிப்பாளர்  பழனிச்சாமி ஒப்படைத்தார் நேர்மையாக பணத்தை ஒப்படைத்த  தனியார் நிறுவன ஊழியர் காயத்திரிக்கு பலா, மரக்கன்று வழங்கி காவல் துணைகண்காணிப்பாளர்...

தேவர் ஜெயந்தி

Image
தேவர் ஜெயந்தி   தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56வது வயதில் இதே நாளில் காலமானார். 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார். மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார். "என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்றுஇறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டத...

வி. சாந்தாராம்

Image
    நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்த வி. சாந்தாராம் காலமான நாளின்று தமிழ் நாட்டில் டைரக்ஷனில் புதுமையைப் புகுத்திய ஸ்ரீதர், கே.பாலசந்தர் உள்பட பல டைரக்டர்களும், வடநாட்டில் உள்ள பல பிரபல டைரக்டர்களும் கூட, சாந்தாராமை தங்கள் வழி காட்டியாகக் கொண்டிருதாங்களாக்கும். அதையெல்லாம் விட குறிப்பாக சொல்லணுமுன்னா ‘‘படங்களை இயக்குவதற்கு என் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் வி.சாந்தாராம்’’ என்று புகழாரம் சூட்டிய எம்.ஜி.ஆர்., அவர் காலில் விழுந்து வணங்கினார் என்றால், சாந்தாராம் எப்படிப்பட்ட மாமனிதராக இருக்க வேண்டும்! சாந்தராம் தக்கணூண்டு வயசிலேயே பாபுரா சினிமா கம்பெனியில் சேர்ந்து சினி புரொடக்‌ஷன், லேப் ஜாப் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற டெக்னாலஜிக்களைத் தெரிந்துகொண்டார். அப்பாலே 1929ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து ‘பிரபாத் பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தாதா சாஹேப் பால்கே தயாரித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் கதையை 1932இல் ‘அயோத்யா கா ராஜா’ என்ற பெயரில் இயக்கி முதன் முதலில் பெண்களை ந...

லா.ச.ரா

Image
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் பிறந்த நாள்   தமிழ்நாடு லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர். லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது. லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினா...

ரா.கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு

Image
ரா.கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு காலமான தினமின்று   விடுதலைப் போராட்ட வீரர். அதே சமயம் தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தம தலைவர். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 இல் ஆகஸ்ற் இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக...

கொரானா கால திவசம்

Image
கொரானா கால திவசம்     சிறுகதை                                     எஸ்.ஸ்ரீதர்       பொதுவாக திவசம் என்றால் நடுத்தர குடும்பங்களுக்கு ஆசாரம், சிரத்தை எல்லாம் எங்கிருந்து வருமோ தெரியாது. `அதைத் தொடாதே, அங்கே நிக்காதே,   மொதல்ல குளி, மொதல்ல அதை நனை என்று கெடுபிடி பார்ப்பார்கள். ஆனால் சைனாக்காரன் எப்போது கொரானாவைத் திருப்பிவிட்டானோ அப்போதே அனைத்தும் விடைபெற்றுக் கொண்டுவிட்டது. இப்போது  முன்ஜாக்கிரதை யோடு பயமும் வந்து விட்டது. எதற்கெடுத்தாலும், எதைப்பார்த்தாலும் பயம். விடியற்காலையிலேயே வாத்தியார் எங்கேயாவது கிளம்பிப் போய்விடுவாரோ என்று பல் தேய்த்ததும் முதல் காரியமாக ஒரு நினைவூட்டல் கால் போடலாம் என்று போன் அடித்தால் அவர் தயாராக இருந்தார். பாவம், கொரானாவில் அடி வாங்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களில் புரோகிதமும் ஒன்று இல்லையா. . `ஹலோ, பட்டு வாத்தியாரா?' `ஆமா, ரகு மாமாவா? இதோ கிளம்பிண்டே இருக்கேன். இன்னும் ஒரு 20 நிமிஷத்திலே...' `வாங்கோ. ரெண்டு பிராமின்ஸ்க்கு ...

கவிஞர் வாலி

Image
வாலி திரைப்பட பிரமுகர் பிறந்த தினம் இன்று  அக்டோபர் 29, 1931 கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை எழுதுவதில் இவரை வெல்ல எவரும் இல்லையென்றே கூறலாம். சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டத் திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள இவர், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இவர் எழுதிய ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ணா விஜயம்’ போன்ற கவிதைத்தொகுப்புகள் புகழ்பெற்ற படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த கவிஞர...

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க

Image
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?? நிம்மதியாக தூங்க வேண்டுமா??உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமா?? வாங்க பார்க்கலாம்..! நம்ம எல்லோர்க்கும் தெரிந்தும் தெரியாமலும் நம் உடம்பினுள் சுரக்கும்  செரோடோனின் ( Serotonin) இரசாயனம் இவை எல்லாவற்றுக்கும் காரணம். இரசாயனமா அப்படியென்றால் அது நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் அப்படியெல்லாம் இல்லை... பருத்திவீரன் படத்தில் பிரியாமணி சண்டை போட்ட பின்னர் அழுதுட்டே சாப்பாட்டுல கறியை அள்ளிப் போட்டு சாப்பிடுற மாதிரி தான் சிலர் சோகமாக இருக்கும் போது அதிகமாக சாப்பிடுவதை நாம் வீட்டுகளில்  கூட பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த செரோடோனின் இருக்காங்களே அவங்க உங்க உடம்பில் அதிகமாக  உற்பத்தியாகும் போது அதீத ஆனந்தம் பிறக்கும்.தூக்கம் நேரத்துக்கு வரும்.உயர் இரத்த அழுத்தம் குறையும். அப்போ செரோடோனை எப்படி அதிகரிப்பது?  பிடித்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.உற்பத்தி உடலில் அதிகரிக்க மகிழ்ச்சியும் மன அமைதியும் பெருகும். ஆய்வுகளின்படி செரோடோனின் அதிகரிக்க முட்டை,பால் ,சாலமன் மீன்,நண்டு,சிவப்பு இறை...

ஆரோக்கிய சேது

Image
கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, நமது ஸ்மார்ட்போனில் இருந்தால், அருகில் வரும் மற்றொரு ஆரோக்கிய சேது பயன்பாட்டாளரின் உடல் நலத்தை பற்றிய அறிவிப்பை நமது அலைபேசியில் பெறலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அது நமக்கு எச்சரிக்கை தரும். மேலும் அந்த கொரோனா நோயாளி, எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவும். இது போன்று பல நன்மைகளை கொண்ட ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அதனை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டது.   இதையடுத்து Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசிய தகவல் மையத்தை கேட்டது. இந்த நிலையில் தற்போது அந்த கேள்விகளுக்கு மத்திய மின்னியல் அமைச்சகம் அளித்த பதிலில், யாரால் இந்த ஆரோக்கிய சேத...

சர்வதேச பக்கவாத தினம்

Image
சர்வதேச பக்கவாத தினம் உலகம் முழுக்க இதே அக்டோபர் 29ம் தேதி வருசா வருஷம் இந்த சர்வதேச பக்கவாத தினம் கடைப்பிடிக்கப்படுது. பக்கவாதத்தை தடுப்பது, சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். உலகம் முழுவதும் இறப்புக்கும், ஊனத்திற்கும் முக்கிய காரணமாக உள்ள பக்கவாதம் உலகளவிலான முக்கிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. பக்கவாதத்தால் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி பேரும், இந்தியாவில் 15 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். 50 வயதைக் கடந்தவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது அப்படீன்னு டாக்டர்கள் தெரிவிக்கின்றாங்க. அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு செல்கிற ரத்த ஓட்டம் தடைபடும் போது உயிர்க்காற்றும், சத்துக்களும் கிடைக்காமல் அப்பகுதி செயலற்றுப் போவதால், உடலின் எதிர்பாகத்தில் உள்ள உறுப்புகள் செயலற்றுப் போவதை பக்கவாதம் என்று சொல்றோம். நம் மனித மூளையை வலது, இடது என இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றாங்க இதிலே இடது பக்கம் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ரத்த அடைப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுகிறபோது,...

சமையல் எரிவாயு பதிவுக்கு நாடு முழுவதும் ஒரே செல்போன் எண்

Image
சமையல் எரிவாயு பதிவுக்கு நாடு முழுவதும் ஒரே செல்போன்னை எண்ணை அறிமுகம் செய்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம். இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இந்நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம். இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒருமாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம்

கனமழை

Image
    சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலையில் கனமழை கொட்டியது.மேற்கூறிய சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. இதுபோல் கோயம்பேடு முதல் தாம்பரம் வரை மெயின் ரோட்டில் மழை நீர் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது. கனமழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழை அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், #chennairains ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது.சென்னையில் மழைப்பொழிவு விவரங்கள்:அண்ணாபல்ககலை., சாலையில் அதிகப்பட்சமாக 7 செ.மீ., நுங்கம்பாக்கம்: 5 செ.மீ., மீனம்பாக்கத்த...

தாய் அழுதாலே நீ வர நீ அழுதாயே தாய் வர

Image
இன்று பிறந்த நாள் அக்டோபர் 29 ' வாலி' பக் கவிஞர் வயதாவது உடலுக்கு மட்டுமே வரிகளுக்கு இல்லை. 'மல்லிகை என் மன்னன் மயங்கும் ' 'சோனாபரியா சோனாபரியா' மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே . தாக்குதே கண் தாக்குதே. . எனக்காகப் பொறந்தாயே எனதழகி. நங்கை நிலாவின் தங்கை..   இன்னும்..இன்னும்.      

கால தூர தேசம் கடந்தும் வாழும் ஞானி.

Image
" ஸ்ரீ ரங்கத்தில் உதித்த ரங்கராஜன், தாய் தமிழ் அங்கராஜன், பாட்டெழுதும் சோலி, எழுத பாமரர்க்கும் லாலி, காதலர்க்கு உன் வரிகள் ஜாலி, வார்த்தைகளுக்கு இல்லை என்றும் வேலி, உக்கிரத்தில் நீ திரிசூலி, அன்புணர்வில் நீ மயில் பீலி, காற்றலையில் வாழ்கிறாய் நீ வாலி, நின் நாவும் எழுத்தாணி, கற்பகம் தந்த பொற்பகமேகால தூர தேசம் கடந்தும் வாழும் நீ ஞானி..!! " மனமார்ந்த சிறந்த  நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.. கவிமுரசு பிரவீன்

இந்தியா-ஆஸ்திரேலிய தொடர்: போட்டி அட்டவணை

Image
இந்தியா-ஆஸ்திரேலிய தொடர்: போட்டி அட்டவணை வெளியீடு சிட்னி: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 3 டி.20 மற்றும் 4 டெஸ்ட்டில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கோஹ்லி தலைமையிலான அணியில் இளம்வீரர்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் காயம் காரணமாக ரோகித்சர்மா இடம்பெற வில்லை. இந்நிலையில் போட்டி அட்டவணையை ஆஸி. கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், பகலிரவு டெஸ்ட் அடிலெய்ட்டில் டிச. 17 முதல் 21ம் தேதி வரைநடைபெற உள்ளது. பாக்சிங்டே டெஸ்ட் டி.26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. போட்டி தேதி இடம் முதல் ஒன்டே நவ. 27 சிட்னி (பகலிரவு) 2வது ஒன்டே நவ.29 சிட்னி(பகலிரவு) 3வது ஒன்டே டிச.2 கான்பெரா(பகலிரவு) முதல் டி.20 டிச.  4  கான்பெரா 2வது டி20 டிச. 6  சிட்னி 3வது டி.20 டிச.8 சிட்னி முதல் டெஸ்ட் டிச.17-21 அடிலெய்ட் (பகலிரவு) 2வது டெஸ்ட் டிச. 26-30 மெல்போர்ன் 3வது டெஸ்ட்  ஜன.7-11  சிட்னி 4வது டெஸ்ட் ஜன. 15-19 பிரிஸ்பேன்

கொஞ்சம் மும்பை தாண்டி வாங்க

Image
சஞ்சய் கொஞ்சம் மும்பை தாண்டி வாங்க - கே.எல் ராகுல் குறித்த கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதிலடி இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டது குறித்து வினவிய முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகருக்கு கிரிஷ் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க இருக்கும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அடுத்த மாதம் 27 ஆம் தேதியன்று தொடங்க இருக்கின்றன. காயம் காரணமாக ரோகித் ஷர்மா அணியில் இடம்பெற வில்லை. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் “ஐபிஎல் போட்டிகளில் நல்ல செயல்திறனை வெளிப்படுத்தியதின் அடிப்படையில், அந்த வீரரை டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறச் செய்ததின் வாயிலாக மோசமான முன்னுதாரணம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டிகளில் அந்த வீரரின் செயல்திறன் மிக மோசமாக அமைந்திருந்தது. ஆகையால் இவ்வகையான தேர்வானது நிச்சயமாக ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்” என்று கூறினார் You s...

பில்_கேட்ஸ் பிறந்த தினம் இன்று.

Image
 ·    # பில்_கேட்ஸ் பிறந்த தினம் இன்று...   வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது. வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார், மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின்...