இசை, பிரியாது!
இசை, பிரியாது!
காலவரையின்றி
கனமானக் குரல் கொண்டு
மிதமாகத் தாலாட்டியப் பாடல்
'ஸ்கிரீச்'சிடாமல் திக்கியோடி
ஐம்பது நாளில் நின்று போக,
'பிளே' பட்டனை அழுத்தியவனே
'இஜெக்ட்'டையும் அழுத்தினானோ?
பலப் பெண்களுக்கு 'நானா'வாக
திகழ்ந்த காந்தக் குரல்
ஒரு 'நாடா'வாக அறுப்படும்
என வூஹான் சந்தையிலேச்
சொல்லியிருந்தால் கூட
நம்பியிருக்கமாட்டோமே!
இத்தனைக் கோடி இருதயங்களையும்
தூக்கி நிறுத்தியவனை,
பட்டாடைப் போர்த்திப் பாராட்டி
மகிழ்ந்தோமே...
அவனைத் தலைக்கு மேல்
தூக்கியாடும்
பலமும்
பாக்கியமும்
என்னவோ
கடவுள்,
'கொரோனா'க்குத்தான்
கொடுத்தானோ!
உனையுண்ட
இக்கிருமி
இனி
கொடூரத்தை இழந்திடுமே!
குழியில் புதையுண்டது
அவரல்ல,
வைரஸாக்கும்!!
"மண்ணைக் கவ்வியது கோவிட்19"
SPB யின் உயிர்ப் பிரியவில்லை,
ப...ர...வி...ய...து
இன்று!!!
- M மிருத்திகா
Comments