கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தணும்
கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தணும்
இந்து அமைப்புகள் அரசுக்கு வலியுறுத்தல்
06-09- 2020
கோவை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும், ஆவணப்படுத்த வேண்டும் என்று, இந்து அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
இது குறித்து, இந்துக்கள் கூறியதாவது: அறநிலையத் துறையின் கீழ் தமிழகத்தில், சுமார் 38,000 கோவில்கள் உள்ளன. இவையனைத்தும் அன்றாட வருவாயை ஈட்டுவதோடு, ஏராளமான சொத்துக்களை உள்ளடக்கியது.ஒவ்வொரு மாவட்டத்திலும், அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஏராளமாய் உள்ளன. அவை குத்தகைதாரர்கள் வசம் உள்ளன.குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவற்றிலிருந்து வருவாய் கோவிலுக்கு ஈட்டப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அவ்வருவாய், குறைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது.
கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களில் பலர், வாடகைக்கு வர்த்தகம் செய்கின்றனர். சிலர் குடியிருக்கின்றனர். அதிலிருந்து நியாயமான வருவாய் கோவிலுக்கு வருவதில்லை. இன்னும் பல கோவில்களில், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.தமிழகத்
இதை அப்புறப்படுத்த, அறநிலையத்துறை பெரிய முயற்சிகளை மேற்கொள்ளாதது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான நிலங்களையும், கட்டடங்களையும் ஆவணப்படுத்தி பட்டியலிட வேண்டும். சுவாமி பெயரில் பட்டா இருந்தால் அதை மாற்றவோ, ஏமாற்றவோ முடியாது.அரசு கட்டடங்கள், அரசு தானியக்கிடங்குகள் பெரும்பாலானவை, கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிலங்களை மீட்டு, குத்தகை பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு கொடுத்து, முறையாக வரும் வருவாயை கோவில் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும்.
இது போல் பல்வேறு இந்து அமைப்புகளும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களில் பலர், வாடகைக்கு வர்த்தகம் செய்கின்றனர். சிலர் குடியிருக்கின்றனர். அதிலிருந்து நியாயமான வருவாய் கோவிலுக்கு வருவதில்லை. இன்னும் பல கோவில்களில், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அரசு கட்டடங்கள், அரசு தானியக்கிடங்குகள் பெரும்பாலானவை, கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிலங்களை மீட்டு, குத்தகை பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு கொடுத்து, முறையாக வரும் வருவாயை கோவில் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்
Comments