மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி; எதிர்பார்த்தது போலவே சரிவு

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி; எதிர்பார்த்தது போலவே சரிவு


 செப் 01, 2020  00:25 


புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இதுவரை இல்லாத வகையில், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது.


 


கணிதம்:


இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. பின், ஏப்ரல் 20ம் தேதி முதல் தளர்வுகளை அறிவிக்க துவங்கியது.


ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காரணத்தால், பொருளாதார நடவடிக்கைகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. இதன் காரணமாக, கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், பொருளாதார வளர்ச்சியும், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவுக்குள்ளானது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில், வளர்ச்சி, 3.1 சதவீதமாக இருந்தது. இது, அதற்கு முந்தைய, 44 காலாண்டுகளில் இல்லாத சரிவாகும். மேலும், கடந்த நிதியாண்டின் மொத்த வளர்ச்சி, 4.2 சதவீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இந்த முதல் காலாண்டில், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என அனைவராலும் கணிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட, மைனஸ் 10 சதவீதத்திலிருந்து மைனஸ் 25 சதவீதம் வரை இருக்கும் என பல நிறுவனங்களால் கணித்து சொல்லப்பட்டிருந்தது.


 


சேவை மதிப்பு:


நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சுரங்க துறை வளர்ச்சி, மைனஸ் 23.3 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 4.7 சதவீதமாக அதிகரித்திருந்தது.இதேபோல, தயாரிப்பு துறை வளர்ச்சி, மைனஸ் 39.3 சதவீதமாகவும்; கட்டுமான துறை வளர்ச்சி, மைனஸ் 50.2 சதவீதமாகவும் முதல் காலாண்டில் சரிவைக் கண்டுள்ளது.
இருப்பினும் விவசாயத் துறை மட்டும் வளர்ச்சியை கண்டுள்ளது. இத்துறையானது 3.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாய துறை வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முதல் காலாண்டில், ஜி.வி.ஏ., எனும், மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, மைனஸ் 22.8 சதவீதமாக சரிந்துள்ளது. ஜி.வி.ஏ., என்பது, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு ஆகும்.



 


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி