சாதனை திலகம்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிகழ்த்திய சாதனைகள்
எஸ்.பி.பி 16 மொழிகள் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்து உள்ளார்.
இயக்குநர் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் எஸ்.பி.பி-யை இந்தியில் அறிமுகம் செய்தார். அப்போது எஸ்.பி.பி-க்கு இந்தி துளியும் தெரியாது. எனினும் அப்படத்தில் வரும் 'தேரே மேரே பீச் மெயின்' பாடலை உணர்வுப்பூர்வமாக பாடியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
எஸ்.பி.பி 6 முறை (1979, 1981, 1983, 1988, 1995, 1996) சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
மத்திய அரசு வழங்கும் பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன்(2011) விருதுகளை பெற்றுள்ளார்.
எஸ்.பி.பி தொடரந்து 12 மணி நேரம் பாடியும் சாதனை படைத்துள்ளார்.
தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் ஆறு தேசிய விருதுகள், 25 நந்தி விருதுகள், 4 தமிழக அரசு விருதுகள் என 50-க்கும் மேற்பட்ட விருதுகளை எஸ்.பி.பி வாங்கி குவித்துள்ளார். ஆனால் அதைவிட கோடிக்கணகான உள்ளங்களை வென்றிருக்கிறார்.
1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி, ஒரே நாளில் 21 பாடல்களை கர்நாடக இசையமைப்பாளர் உபேந்திராவுக்காக பாடியவர் எஸ்.பி.பி.
பாடகராக மட்டும் இல்லாமல் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையும் அமைத்துள்ளார் எஸ்.பி.பி. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கும் டப்பிங்கும் கொடுத்துள்ளார்.
எஸ்.பி.பி இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதராத்யுலா பாலசுப்பிரமண்யம்
1946 ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாடு கொனெட்டம்பேட்டை கிராமத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அவரது இரத்தத்தில் கலை மரபணுக்களைக் கொண்டிருந்தார். அவரது தந்தை மறைந்த எஸ்.பி. சம்பமூர்த்தி முதன்மையாக ஹரிகதா கலைஞராக இருந்தார், அவர் நாடகத்திலும் நடித்து வந்தார்.
சிறு வயதிலேயே அவர் இசை மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டாலும், அதனை கற்றுக் கொண்டாலும், அவர் ஒரு இன்ஜினியராக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆந்திராவின் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.ஆனால் டைபாய்டு காய்ச்சல் காரணமாக அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார். ஆனால் பின்னர் சென்னையில் உள்ள பொறியாளர்களின் நிறுவனத்தில் இணை உறுப்பினராக சேர்ந்தார்.
எஸ்.பி.பியின் பின்னணி பாடகராக 1966 ஆம் ஆண்டில் அறிமுகமான தெலுங்கு திரைப்படமான 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா'வுக்கு குரல் கொடுத்தார், அதன் பின்னணி இசை அவரது வழிகாட்டியான எஸ்.பி. கோதண்டபாணி வழங்கினார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் ஆரம்ப காலத்தில் தனது தமிழ் உச்சரிப்புக்காக முதலில் புறக்கணிக்கப்பட்டவர். ஒரு வருடத்தில் அனைவரையும் தன் குரலுக்காக ஏங்க வைத்தவர் எஸ்.பி.பி.
இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனின் அறிவுரைப்படி, ஒரு வருட கால பயிற்சிக்கு பிறகு அவர் பாடத் தொடங்கியபோது, தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகர்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
சக கலைஞர்களை நேசித்தவர் எஸ்.பி.பி. பாடகர் ஜேசுதாஸ் சினிமாவில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்வில், பாதை பூஜை செய்து மரியாதை செய்தார்.
Comments