தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ

தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ


24-09-2020


இயற்கை முறையிலேயே எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொப்பையை குறைக்க உதவும் டீ தயாரிப்பது


 


பட்டை மிளகு டீ


தேவையான பொருள்கள் :

தண்ணீர் - 250 மில்லி


பட்டை - ஒரு துண்டு
மிளகு - 10
மஞ்சள் - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:

250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வை.  மிளகை இடித்து  போடு.  சிறிதளவு பட்டையை பொடித்து போடு.  இவற்றை சிறு தீயில் கொதிக்க வை.

மஞ்சள் தூளை நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடு.

ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடு.

கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி பத்து நிமிடம் கழித்து இந்த தண்ணீரை அருந்து.

இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடி. முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம்.


இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் குடிக்கலாம்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி