உலக சுற்றுலா தினம்

செப்டெம்பர் 27,
வரலாற்றில் இன்று.


உலக சுற்றுலா தினம் இன்று.


உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டெம்பர் 27ஆம் நாளில், 1980ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும்,
சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இத்தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.



         "ஆயிரம் தடவைகள் ஒரு விடயத்தினை காதால் கேட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் ஒரு தடவையாயினும் கண்களால் பார்த்து விடு" என்பார்கள். என் பயணங்கள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உத்வேகமும், உற்சாகமும் இதுதான். ஞாபகங்களை மட்டுமே மீட்டக் கூடிய வயதுகளில் அனுபவங்களை தேடி அலைய முடியாது என்பதை நான் அறிவேன். 


அவ்வயதுகளில் எனக்கு வாழக் கிடைத்தாலும் நீர் வீழ்ச்சிகளையும், மலைகளையும், காடுகளையும் என்னால் ஒரு தூரத்தில் காருக்குள்ளோ, வேனிற்குள்ளோ இருந்து பார்க்கத்தான் முடியும். அவற்றின் கரடு முரடான பாதைகள் தருகின்ற இன்பமான வலிகளையும், உச்சிகள் மட்டுமே ஒழித்து வைத்திருக்கின்ற காட்சிகளையும் எவ்விலை கொடுத்தும் என்னால் வாங்கிட முடியாது. 


உடல் வியர்த்து, கால் கடுத்து, கைகளில் சிராய்ப்புகளோடு ஏறி ஒரு மலையின் உச்சியை அடைந்ததும் மனதினை வருடும் சந்தோசத்தினையும், உடலை வருடுகின்ற குளிரினையும் ஒன்று சேர யாரேனும் அனுபவித்திருக்கின்றீர்களா?  கண்களை வியக்க வைக்கும் அக்காட்சிகளை கணாது வெறுமனே பணத்திற்காக வாழ்ந்து போனவர்கள் எல்லாமே என் பார்வையில் துர்ப்பாக்கியசாலிகள்தான். 


மலைகளுக்கும், காடுகளுக்கும் ஒரு பண்பு இருக்கின்றது.  ஒவ்வொரு மலையும், காடும் செல்வதற்கு இன்னும் பல மலைகளும், காடுகளும் உண்டு என்ற ஆசைத் தீயினைத்தான் மனதில் பற்ற வைத்துச் செல்லும். எந்தப்பயணமும் மனதில் போதுமென முற்றுப் புள்ளி இட்டு திருப்தியடைந்ததில்லை. ஏன் மரணம் கூட முற்றுப் புள்ளியில்லா ஒரு தொடர் பயணம்தான். 


ஒவ்வொரு பயணமும் ஒரு ஆசான். வாழ்வில் எங்கேயோ தேவைப்படும் ஏதோவொரு பாடத்தை அவை சொல்லித் தந்து கொண்டேதான் இருக்கின்றன. கிடைத்தவற்றில் திருப்திப்படவும், தன்னைத்தானே நம்பிடவும், தைரியமாய் முடிவெடுத்திடவும் சொல்லிக் கொடுத்தவை இப் பயணங்கள்தான்.


பயணங்கள் அற்புதமானவை...



 அவைதான் சுதந்திரத்தையும், உள்ளுணர்வையும், உடல் பலத்தினையும் காட்டித் தருபவை...


 


அதிசயம் நிறைந்த இடங்கள்  எங்கும் நிறைந்துள்ளது...


வருடம் முழுவதும் 
உழைத்ததின் பலனாய்
குடும்பத்தோடு கொண்டாடி
சுற்றுலா சென்று ஆனந்தம் கொள் ளலாம்...


இல்லாளின் முகத்தில் 
இன்பத்தை பார்க்கலாம்...


குழந்தைகள் முகத்தில் 
குதூகளம் பார்க்கலாம்...


பெரியோர்கள் முகத்தில் 
பரவசம் காணலாம்...


பார்த்து வந்த இடங்களை 
பட்டியலிட்டு அசை போட்டுக்கொண்டே 
அடுத்தடுத்த தினங்கலெல்லாம் 
அழகாய் செல்லும் 
மகிழ்ச்சியை பார்க்கலாம் ...


 துன்பம் கவலைகளை
 மறந்து 
சுற்றி பறக்கும் பறவை போல‌ 
சுற்றுலா சென்று 
நாமும் சுகமாய் வருவோம்..


மஞ்சுளா யுகேஷ்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி