தனியார் பள்ளி பெண் முதல்வர் பெட்டிக்கடை வைத்து தேநீர் விற்பனை
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே, பொதுமுடக்கத்தால் பள்ளி மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த தனியார் பள்ளி பெண் முதல்வர் பெட்டிக்கடை வைத்து தேநீர் விற்பனை செய்வது அனைவரையும் கவர்ந்துள்ளது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). இவரது மனைவி செல்வி(32). முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகள் பல்வேறு தனியார் பள்ளிகளிலும், திருமணத்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகத் தனது கணவரின் தனியார் பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஆவின் பாலகம் பெட்டிக்கடை வைத்து, தேநீர் விற்பனை செய்து வருகிறார். பள்ளி மாணவ-மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் இவரிடம் வியாபாரம் செய்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்
Comments