50 பேரன்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 105 வயது மூதாட்டி
50 பேரன்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 105 வயது மூதாட்டி
சேலம்: நான்கு தலைமுறை குடும்பத்தினர் இணைந்து, 105 வயது மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
சேலம் மாவட்டம்,அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த, பெரியதம்பி மனைவி பொன்னம்மாள், 105. நான்கு மகன்கள், மூன்று மகள்களை படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தனர். 20 ஆண்டுகளுக்கு முன், பெரியதம்பி இறந்து விட்டார்.
மனம் தளராத பொன்னம்மாள், தன் மகன்கள் நடத்தும் கசாப்பு கடைகளுக்கு சென்று, சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். இன்றும், தன் தேவைகளை, அவரே பூர்த்தி செய்து கொள்கிறார். நான்கு தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், கொள்ளு பேரன் உட்பட, 50க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர். நேற்று முன்தினம், 105வது பிறந்த நாள் கண்ட பொன்னம்மாளுக்கு, குடும்ப உறவினர்கள் ஒன்று கூடி, பெரிய அளவில், 'கேக்' வெட்டி, விருந்து வைத்து, பாட்டிக்கு வாழ்த்து கூறினர்.
Comments