சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள்

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 




 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், பொதுபோக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காகவும், அவசரத் தேவைகளுக்காக செல்லும் மக்களுக்காகவும் ஒரு சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது. இந்தசூழலில் தற்போது சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் (சென்னை- திருவனந்தபுரம், சென்னை - மசூரு, சென்னை- மங்களூரு) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செப்.27 ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி