அழகு தமிழ் இலங்கை வானொலி பகுதி 2

 


அழகு தமிழ் இலங்கை வானொலி  பகுதி  2


தெற்காசியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை வானொலி நிலையம் என்றாலும், ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன் தமிழக மக்களால் வெகுவாக விரும்பப்பட்ட வானொலி நிலையம்.


 காரணம், இந்த இலங்கை வானொலி நிலையத்தில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பேசும் மொழிநடை மற்றும் நிகழ்ச்சிகள்  என்றென்றும் நம் நினைவை விட்டு அகலாதவை. 


 நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மதிப்புக்குரிய திரு. ஜி. பால் அண்டனி, திரு.மயில்வாகனன், திரு கே. எஸ். ராஜா, திரு பி. எச்.  அப்துல் ஹமீத், திருமதி. ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் திருமதி. கோகில வர்த்தினி சிவராஜா போன்றோர்கள்  தொகுத்து வழங்கும் போதும்.  அதைக் கேட்கும் போதும் நம் மனதுக்கு இதமாகும்



 நான் ஒரு  நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன். பள்ளி மற்றும் கல்லூரி விடுப்பு நாட்களில் நானும் எனது சகோதரர்கள் இருவரும் நெசவுத்தொழில் மேற்கொள்ளும் போது, வானொலி கேட்டுக்கொண்டே தொழில் புரிவதுண்டு. 



 இலங்கை வானொலி நிலையம், அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் பொங்கும் பூம்புனல். சிறுவர் மலர், இசைக் களஞ்சியம், மெட்டு ஒன்று பாட்டு பல., பிறந்தநாள் நிகழ்ச்சிகள். பெண்களுக்கான பூவையர் பூங்கா,  இசையும் கதையும், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் செய்திகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள்,  இலங்கை வானொலியில் அந்த காலகட்டத்தில் கேட்டு இரசித்ததுண்டு. 



 ஒவ்வொருவரும் தனக்கே  உரிய தனித் திறமையைக் கொண்டு வந்து, தமிழ் மொழியையே மட்டும் உச்சரித்து, பல்வேறு கட்டமாக திரைப்பட பாடல்கள் ஒலிப்  பரப்பப்பட்டு கேட்பவரை மகிழ்விப்பார்கள்.


 செய்தியை, சொல்லும் பொழுது அழகு தமிழில் உச்சரிப்பார்கள்.
 உதாரணமாக,  கிரிக்கெட்டில் 50 ரன் எடுத்து ஒரு விளையாட்டு வீரர் அவுட்டானார் என தமிழ்நாட்டில் வர்ணனை சொல்லும் ஒரு செய்தி.


 இதே இலங்கை வானொலி நிலையத்தில் இந்த செய்தியைச் சொல்லும் பட்சத்தில், தமிழ் மொழியில்,  மட்டைப்பந்து விளையாட்டில், 50 ஓட்டங்கள் எடுத்து ஒரு விளையாட்டு வீரர் ஆட்டமிழந்தார். இவ்வாறு  தமிழில் பிறமொழி கலப்பு இல்லாத உச்சரிப்பார்கள். 


 சென்னை வானொலி நிலையம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு காலை  9.30  மணிக்கு முடிந்துவிடும். இலங்கை வானொலி நிலையம்  காலை 10.00 மணிக்கு முடிந்தது, மீண்டும் 12.00 மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள். ஆட்டம் பாட்டும் கொண்டாட்டம், இலங்கை வானொலி ஒலி பரப்பு நிலையம் நமக்கு தரும்


 அந்த காலகட்டத்தில், யார் வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி  இல்லாத காலத்தில், இலங்கை வானொலி நிலையம் ஒலிப்பரப்பும்  நிகழ்ச்சிகள் இன்று நினைக்கும் போதும் ஆனந்தத்தைத் தரும். 



 இலங்கை வானொலி நிலையத்தில், தமிழ்நாட்டில் திரைப்படம் வராத இருக்கும் படத்தில், உள்ள பாட்டுகள் இலங்கை வானொலி நிலையம் முன்னாலே ஒலிபரப்பு செய்து விடும். 
 
 அதைப்போல, இந்தியாவில் உள்ள நடுவன் அரசின் தொலைக்காட்சி நிலையத்தின் பெயர் "தூர்தர்ஷன்'' என்று இருப்பது போல, இலங்கையில "ரூபவாகினி'' என்ற பெயரிலும் தொலைக்காட்சி நிலையம் இருந்து வந்தது, மயில் தான் அந்த தொலைக்காட்சியின் சின்னமாகவும் இருந்தது.


 இலங்கையை ஆண்ட இராவணன்  தன் தேசத்தின் கொடியாக  " வீணை" சின்னம் பயன்படுத்தினார் என வரலாறு தெரிவிக்கிறது.


 இலங்கையில் இருந்தவர்கள், தமிழ் மொழியையும் இசையும் ரசித்தார்கள் என்பதற்கான  சான்றுகள் இவை.


 இலங்கை வானொலி நிலையம் ஒலிபரப்பும்  நல்லதொரு தமிழ்  நிகழ்ச்சிகளுக்கும், அக்காலத்தில் தேனினும் தமிழ் மொழியில் உச்சரித்து தொகுத்து வழங்கியவர்களை பெருமைப்படுத்தி நினைவு கூறும் வகையில் இப்பதிவு அமையும் என்பதால்  அகம் மகிழ்கிறேன்.



 இதிகாச சொற்பொழிவினை, நம்மை மெய்மறக்கச் செய்து,  தனது தெய்வீகக் குரலால் உரை நிகழ்த்தி இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழர் இன்றும் நமது மனதை வருடுகிறார், இவர் குறித்து நாளைய பதிவில் பார்க்கலாம்


 முருக.சண்முகம்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி