அழகு தமிழ் இலங்கை வானொலி பகுதி 1

        இலங்கை வானொலி   (தொடர்)


 


அழகு தமிழ் இலங்கை வானொலி  பகுதி  1


தெற்கு ஆசியாவிலேயே முதல் வானொலி ஒலிபரப்பு நிலையம் ஆரம்பிக்கும் போது, அடித்தளமிட்ட ஒருவராகவும், இலங்கையின் தொழில் நுட்ப தலைமை அதிகாரியாக இருந்தவர்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழர். பிறந்த நாள் இன்று சிறந்த நாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்  என்று, ஏறக்குறைய   40 ஆண்டுகளுக்கு முன்னாலே இலங்கை வானொலி நிலையத்தில், காலையில் ஒளிபரப்பப்படும் பாடல் இது


 அன்றாடம் பிறந்தநாள் கொண்டாடும் நபர்களுக்காக வாழ்த்துச் சொல்லும் நிகழ்ச்சி.


 ஆம், இலங்கை வானொலி நிலையத்தில், நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து, தன் விருப்ப ஓய்வு காரணமாக வெளியில் வந்த 
 'உங்கள் அன்பு  அறிவிப்பாளர் 'என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பி. எச். அப்துல் ஹமீது என்பவரை தமிழர்களாகிய நாம் யாரும் மறக்க முடியாது.



 அவர் நிகழ்ச்சியை தொகுக்கும் போது, ஆங்கில கலப்படமில்லாத தமிழை மட்டுமே அழகாக உச்சரிப்பார். அவரின் மொழிநடை தனித்தன்மை வாய்ந்தது. 


 இசை ஞானம் மிக்கவர், சென்னையில் வந்து,  பாட்டுக்கு பாட்டு என்னும் ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள் பாடும் போது,  அந்தப் பாடல் விவரங்களையும், அந்தப் பாடல் எந்த சூழ்நிலையில் பாடப்பட்டது என்றும். எந்த ராகம் என்றும் மேடையிலேயே சுட்டிக்காட்டுவார். அந்த அளவுக்கு தமிழ் பாடல்கள் மீது இசை ஞானம் உள்ளவர். சில சமயம் தமிழ் மொழியை உச்சரிக்கும் போது  குறில் நெடில் என்ற வார்த்தையை பயன் படுத்தியும் அழகு தமிழுக்கு பெருமை சேர்த்து,  தமிழில் தெள்ளத்தெளிவாக உரைத்து,  கேட்பவர் மனதினை ஈர்ப்பவர்.


 ஒரு முறை இலங்கை வானொலி நிலையம் ஆரம்ப நிலை தொடர்பாக பி எச் அப்துல் ஹமீது அவர்களிடம் விபரங்கள் கேட்டபோது அவர் அளித்த பதில். 



1923 ஆம் ஆண்டு, தெற்கு ஆசியாவிலேயே, முதல் வானொலி ஒளிபரப்பு நிலையம். பரிட்சாத்த முறையில் ஆரம்பிக்கப்பட்டது


 இங்கிலாந்தில் இருந்து, ஒயர்லஸ் கருவியை பொருத்துவதற்காக, தொலைத் தொடர்பு அதிகாரி எட்வர்ட் ஆபர் என்பவர் இலங்கை வந்தார். அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் மூன்று பேர்.


1. பி. ஜான் திலக, 2.W.E.டிசில்வா 
3. யாழ்ப்பாணம் ஐயம்பிள்ளை நடராசா, இவர் ஒரு தமிழர்.
 
 இம்மூவரில் தலைமை அமைப்பாளர், யாழ்ப்பாணம் ஐயம்பிள்ளை நடராசாஅவர்கள் 
 
 இவர்தான் இலங்கை வானொலி ஒளிபரப்பு நிலையம் ஆரம்பித்த ஒரு தமிழ் வித்து என்று திரு பி. எச்.  அப்துல் அமீது  பெருமையுடன் அந்தப் பேட்டியில் பதிலளித்தார்.


 யாழ்ப்பாணம் திரு அய்யம் பிள்ளை நடராசா அவர்கள்,  தன்னுடைய ஆய்வில், 2 கிலோ பளு  கொண்ட ஒரு டிரான்ஸ்மிட்டர் மற்றும் 5 கிலோ பளு  கொண்ட ஒரு டிரான்ஸ் மீட்டர் உருவாக்கியவர் எனவும், வானொலியைக் கண்டுபிடித்த, இங்கிலாந்தைச் சேர்ந்த கம்பியில்லாத் தந்தி கண்டுபிடித்த விஞ்ஞானி மார்க்கோனி என்பவரிடம். இங்கிலாந்து சென்று போதுமான பயிற்சியை மேற்கொண்டவர் எனவும், Chelmsford,  Birth place of radio என சொல்லப்படும் உலகின் முதலாவது வானொலி ஆய்வகத்தை  நேரில்சென்று பார்த்த பெருமைக்குரியவர் என்றும் இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையம் ஆரம்பிக்க முக்கிய காரணமாய் இருந்தவர் என்றும் தெரிவித்தார்.



 இந்த வானொலி நிலையம், வெற்றிகரமாக நிறுவப்பட்ட  போது, இலங்கை வர்த்தகம் 25 மீட்டர் அலை வரிசையில் ஒளிபரப்பப்பட்டது



 அக்காலத்தில், எவரெஸ்ட் மலையினை முதல் முதலில் ஏறிய திரு டென்சிங், என்பவர் பேட்டியின் போது,  ரேடியோவை அங்கு  பயன்படுத்திய போது. அவ்வமயம் இலங்கை  வானொலி மட்டுமே கேட்கப்பட்டதாக வும், மீதமுள்ள அலை வரிசையில் ஏதும் கேட்கவில்லை என்று  தெரிவித்தார்.


 அந்த அளவுக்கு, மிகவும் சக்தி வாய்ந்த அலைவரிசை அமைப்பை பயன்படுத்தி உள்ளார்கள்.


 எவ்வாறாக இருப்பினும், இலங்கை வானொலி ஒளிபரப்பு நிலையம் அமைத்ததில் நம்முடைய  தமிழனுக்கும்  முக்கிய பங்கு   இருந்தது . அதனை 
 நினைக்கும் போது தமிழனுக்கும் பெருமை தானே.


 அழகு தமிழை மட்டுமே உச்சரிக்கும் இலங்கை வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், மற்றும் சில வானொலி  நிகழ்ச்சிகளை நாளைய பதிவில் பார்ப்போம். 


 முருக சண்முகம்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி