தமிழக அரசின் குரூப்-1 அதிகாரிகள் 5 பேர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிநிலை உயர்வு
தமிழக அரசின் குரூப்-1 அதிகாரிகள் 5 பேர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிநிலை உயர்வு
தமிழக அரசின் குரூப்-1 அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிநிலை உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19, 2020
சென்னை,
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதிவரை ஏற்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காலியிடத்தை நிரப்புவதற்காக, தமிழக அரசுப் பணியில் உள்ள (குரூப்-1) அலுவலர்கள் 5 பேரை தமிழக அரசு பணியில் ஐ.ஏ.எஸ். பணியிடங்களுக்கு பணிநிலை உயர்த்தி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி,
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயலாளர் மற்றும் பணியாளர்கள் அலுவலர் பி.கணேசன்,
- கலால் வரி துணை ஆணையர் எம்.எஸ்.சங்கீதா,
- மாநில விருந்தினர் மாளிகை இணை நெறிமுறை அலுவலர் டி.கிறிஸ்துராஜ்,
- வன்னியகுல ஷத்திரிய பொதுநலன் அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளர் ஆர்.பிருந்தா தேவி,
- சிறப்பு டி.ஆர்.ஓ. எம்.அருணா
ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணிநிலை உயர்வு பெற்றுள்ளனர்
Comments