வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் திருவிழா

 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும் . பெசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த பேராலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படும்


. இந்த ஆண்டு கொரோனா  நோய் தொற்று அச்சம் காரணமாக பக்தர்கள் இன்றி கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுத்  திருவிழா தொடங்கியது. இதன் பிறகு  ஊரடங்கில் தளர்வு களை அறிவித்த தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் அனுமதி வழங்கியது அதன் பிறகும் திருவிழாக் காலம் என்பதாலும் கூட்டம் கூடி விடும் என்பதாலும் வேளாங்கண்ணியில் வெளியூர் மற்றும்  வெளி மாநில பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.   வேளாங்கண்ணியை  சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளியூர் பக்தர்கள் யாரும் உள்ளே வராதவாறு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். வழிபாட்டிற்கு உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதும் திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பேராயர் பங்குத்தந்தை அருட்தந்தையர்கள்  உட்பட 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. திருவிழா நாட்களில் மறையுரை கூட்டுப்பாடல் திருப்பலிகள் நடை பெற்றன. நாள்தோறும் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், மராத்தி ,கிழக்கிந்திய மராத்தி கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலிகள்  நிறைவேற்றப்பட்டு வந்தன. கொரோனா  நோய் தொற்றிலிருந்து உலக மக்களை காக்கவும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வந்தன.  ஒவ்வொரு நாளும் இரவில் தேர் பவனியும்  ஆலயத்தை சுற்றி நடைபெற்று வந்தது.  முக்கிய நிகழ்ச்சி நாளான  இன்று இரவு பெரிய தேர் பவனி நடைபெற்று வருகிறது. மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புனித ஆரோக்கிய அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு பெரிய தேர்பவனி நடைபெற்று வருகிறது. பொதுவாக  பெரிய தேர் பவனியின் போது ஏழு சப்பரங்கள்  வரிசையாக நின்று அணிவகுத்துச் செல்லும் காட்சி அற்புதமாக இருக்கும் . பேராலய முகப்பிலிருந்து தொடங்கும் பெரிய தேர்பவனியானது  கடற்கரை சாலை ஆரிய நாட்டுத் தெரு  வழியாக சுற்றி வந்து பேராலயத்தை  வந்தடையும்.
சப்பரங்கள் மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வது போல் காட்சியளிக்கும்.
ஆனால் இன்று மூன்று சப்பரங்கள் மட்டுமே பேராலயத்தை  சுற்றி பவனி வருகின்றன.  முன்னதாக திருத்தேர்களை தஞ்சை மறை  ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து பெரிய தேர்பவனி பேராலயத்தை சுற்றி  நடைபெற்று வருகிறது.  முதல் தேரில் மெக்கேல் சம்மனசும்  இரண்டாம் தேரில் சூசையப்பரும் மூன்றாவதாக பெரிய தேரில் புனித ஆரோக்கிய மாதாவின் சொரூபமமும் வைக்கப்பட்டு திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. கோவா பக்தர்களால் தூக்கிச் செல்லப்படும் பெரிய தேரின் கீழே சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருச்சி மத்திய  மண்டல காவல் துறை தலைவர் ஜெயராமன் தலைமையில் ஏராளமான போலீஸார் தேர் பவனியின் போது பாதுகாப்பு பணியில் பட்டுள்ளனர். 
         இதனை தொடர்ந்து  நாளை  மாதாவின் பிறந்த நாளை யொட்டி காலையில்  பேராயர்  தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற இருக்கிறது , நாளை மாலை 6.45 மணிக்கு கொடி 
இறக்கப்பட்டு  தமிழில் திருப்பலி, நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு , நன்றி உரைத்தலோடு  திருவிழா நிறைவு பெறுகிறது.
     திருவிழாவை காண பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் உள்ளூர்  பக்தர்கள் உள்ளே நுழைய கூடும் என்பதால் ஆலயத்தின் முகப்பிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் தடுப்பு அமைத்து பக்தர்கள் உள்ளே வராதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி