ஸ்ரீ லட்சுமி கடாட்சம்
ஸ்ரீ லட்சுமி கடாட்சம்
ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும், வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும், குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள்.
மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல் வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்.. மஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. திருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். கஜலக்ஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.
பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும். யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது. கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது
. அஷ்ட லக்ஷ்மி,ஆதி லக்ஷ்மி, மகா லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆகிய லக்ஷ்மியின் அம்சங்கள். 16 விளக்குகள் நெய்யினால் ஏற்றி, மஹாலக்ஷ்மி அர்ச்சனைக்கு வில்வம் இலை, தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் லஷ்மி படம், அர்ச்சனை
செய்ய காசுகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமைகளில் பூஜிப்பது விஷேசம்.. காயேன வாசா மனசேந்திரியை வா புத்யாத்மநா வா ப்ரக்ருதேஸ்வபாவாத் கரோமி யத்யத்சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்பயாமி !!!
Comments