ஓரின உயிர் புல்
இன்றைய இலக்கியசோலையில்
கவிதை
ஓரின உயிர் புல்
பனி விழும் காலம்
ஈர மண்ணின் மடியில்
புல்லின் நுனியில்
வெள்ளை முத்துக்கள்
தங்கியும் தொங்கியும்
விளையாடும் கோலம்
இருவிழிகளும் இரசிக்கும் காலம்
இயற்கை தந்தது நமக்கும்
இனிமையென்றேன் இப்புவிக்கும்
மழை பெய்யும் காலம்
தென்றலெனும் அசைவில்
மெல்ல தலையாட்டி
நீராடி மகிழும் கோலம்
சற்று வளர்ந்து நிற்கும்
தன்னுள்ளே மகிழ்ந்து சிறக்கும்
கன்றை ஈன்ற பசுவொன்று
பசிக்கு இரை தேடுவதுண்டு
வந்தது பசுவும் நலமாக
தந்தது தன்னையே உணவாக
நாழிகை கொஞ்சம் போனபின்னே
கன்றும் பசியால் துள்ளும் முன்னே
தாய்மடி தேடி பாலை உண்டு
பசியும் மறந்ததே இளங் கன்று
பச்சை புல்லால் பசுவும் மகிழ
வெள்ளை பாலால் கன்றும் மகிழ
இருவர் பசியும் போனதிங்கே
இனிதாய் கன்று விளையாடுதிங்கே
இயற்கை தந்த தாவரம் புல்லே
இனிமை தந்தது என் மனதுக்குள்ளே
முருக. சண்முகம்
Comments