பெண் விடுதலை
சுதந்திர தின கவிதை
பெண் விடுதலை எப்போது
முட்டி முட்டி பிதுங்கியது
இதுதானா
இவ்வளவுதானா
என பலதும் கடந்து கடந்து
பிஞ்சிலேயே விதைக்கப்படுகிறது
என்ன செய்வாள் பெண்?
சமூகத்தின் அவநம்பிக்கையை
துடைத்தெறிய
பெரியதாய் துடைப்பம் தேவை
ஆணுக்கு பெண் இங்கே
சரிநிகர் சமானம் என்பதுவெல்லா
ம் கணநேர கைதட்டலாச்சு
பேசி...பேசி...பேசி....
அடிமேல் அடி அடித்து
ஆமை போல் அம்மிநகர்த்தி..
.. ஒரு முதிர்ந்த சமூகம்
படைக்க அழுத்தம்
அதிகம் தேவைப்படுகிறது
கரித்துண்டு வைரமாக்கும்
அழுத்தம்
நள்ளிரவில் நகை அணிந்து
நகர்வலம் வர வேண்டாம்
நண்பகலில் நடுரோட்டில்
எங்கள் பெண் சிசுக்கள்
பத்திரமாய்
நடை பயின்றாலே போதுமே
Comments