கேரள ஸ்பெஷல் - பாலடை பிரதமன்
கேரள ஸ்பெஷல் - பாலடை பிரதமன்
பிரதமன் என்றால் பாயசம்.
இதை இந்துக் கோயில்களில் பிரசாதமாக வழங்குவர். இதில் பல வகைகள் உண்டு. ஏறக்குறைய திரட்டுப்பாலை ஒத்திருக்கும்.
ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வரும் ஓணம் பண்டிகையின்போது இந்தப் பாலடை பிரதமனைச் செய்து நீங்களும் ஓணத்தைக் கொண்டாடலாம்
. என்ன தேவை?
அரிசி பாலடை (கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம் காய்ச்சாத பால் - ஒன்றரை லிட்டர் சர்க்கரை - ஒரு கப் நெய் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை தேங்காய்ப்பால் - அரை கப் முந்திரி - 25 கிராம்
செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பொங்கி வரும்போது பாலடையைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பாலடை பிரதமனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
Comments