சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோக முத்திரை
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோக முத்திரை
ஆகஸ்ட் 17, 2020
இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
உணவு முறை பழக்கத்தாலும், தேவையில்லாத பதட்டத்துக்கு ஆளாவதாலும் இன்றைக்கு முப்பது வயசை தாண்டினாலே பாதி பேர், ‘எனக்கு சர்க்கரை இருக்கு’ ன்னு சொல்றாங்க. அப்படி சர்க்கரை நோய் இருக்கிறவங்க செய்வதற்காகவே மாதங்கி முத்திரை இருக்கிறது. இந்த யோக முத்திரையை சர்க்கரை நோய் இருக்கிறவங்கத் தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறையும்.
நல்ல காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்துகொண்டு, இரு கைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீதும், வலதுகை பெருவிரல் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இப்போது, உங்களின் இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.
தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையில் செய்யலாம். இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
Comments