பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சவால்விடும் விதமாக PICGRAPHY செயலி

, தேனியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் உருவாக்கியுள்ள PICGRAPHY செயலி, வரவேற்பை பெற்று வருகிறது.


 


தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலே மேற்கத்திய நாடுகள் தான் என்ற சிந்தனையை கட்டுடைத்து வருகின்றனர் சமகால இந்திய மாணவர்கள். அத்தகைய மாணவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் தேனியைச் சேர்ந்த 13 வயதான மிதுன் கார்த்திக்.


 


தேனி திட்டச்சாலையைச் சேர்ந்த பாலமுருகன் - ஜெயமணி தம்பதியின் மகனான மிதுன் கார்த்தி, இங்குள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது முதலே கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட மிதுன், கடந்த ஆறு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால், அதனை பயனுள்ளதாக மாற்றி, "பிக்கிராபி" எனும் சமூக வலைதள செயலியை வடிவமைத்துள்ளார்.


பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சவால்விடும் விதமாக PICGRAPHY செயலி, வரவேற்பை பெற்று வருகிறது


செயலி வடிவமைப்பு மட்டுமின்றி, வெப்சைட் டிசைன்களிலும் கலக்கி வரும் மாணவர் மிதுன், விரைவில் ZOOM செயலிக்கு மாற்றாக "ஹலோ நண்பா" என்ற செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி