அவல் பாயாசம்!!
அவல் பாயாசம்!!
தேவையான பொருட்கள்: அவல் – 1/2 கப் சர்க்கரை – 1/2 கப் பால் – 2 கப் ஏலக்காய் – 1 முந்திரிப்பருப்பு – 5 நெய் – 2 தேக்கரண்டி உப்பு – சுவைகேற்ப
செய்முறை: வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலை பொரிந்து எடுக்கவும். பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி, அத்துடன் வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும். பின்னர்�1/2 கப் தண்ணீரில் சூடு செய்யவும். சர்க்கரை கரைந்தவுடன், ஒரு வடிகட்டியில் வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும். இறுதியாக ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.
சர்க்கரை சேர்த்த ஒரு நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம். குறிப்பு அவல் நன்கு வெந்தவுடன் தான் சர்க்கரை சேர்க்கவேண்டும். சர்க்கரை சேர்த்த பின் அவல் வேகாது. இதே போல சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். பாலில் வேகவைக்காமல் தண்ணீரில் வேக வைத்து, பின் இறக்கும் முன் சிறிது பால் சேர்த்தும் செய்யலாம்.
கிருஷ்ணருக்கு பிடித்தமான து
அவல் இனிப்பு பணியாரம்
தேவையானவை:_ பச்சரிசி - 1 கப் அவல் - அரை கப் வெல்லம் - ஒன்றரை கப் நல்லெண்ணெய் -தேவையான அளவு ஏலக்காய் - கால் டீஸ்பூன். செய்முறை:_ அவலையும், அரிசியையும் நன்றாகக் கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும். இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர்விட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தைப் போட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். பிறகு ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவுக்கு மாவை ஊற்றவும். மாவு அடிப்பகுதியில் வெந்ததும், ஸ்பூனை வைத்து திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
Comments