மதுரை மாவட்டம்  சிம்மக்கல் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 74வது சுதந்திர தின விழா :

மதுரை மாவட்டம் 
சிம்மக்கல் பகுதியில் உள்ள
முதியோர் இல்லத்தில்
74வது சுதந்திர தின விழா :


மதுரை சிம்மக்கல் நகர்ப்புற முதியோர் இல்லத்தில் 74வது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. 


முதியோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் அழைப்பின் பேரில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்...


கொரோனா நோய் தடுப்பு முயற்சியாக மக்கள் அதிக எண்ணிக்கையில் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.


அதை கடைபிடித்து மக்கள் குறைவான எண்ணிக்கையில் அழைக்கப்பட்டு இருந்தனர்.


இவ்விழாவில்
பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளி முழுமையாக கடைபிடித்தனர்.


பின்னர் அனைவருக்கும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது..


இந்நிகழ்ச்சயில் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில் முதியோர்கள் நலனில் தங்களின் சேவைகள் தொடரும் என்றார்..
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.


இவ்விழாவில்
சமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், அசோக்குமார், மஸ்தான், கார்த்திக், இளவரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் கிரேசியஸ் நன்றி கூறினார்...


 


மதுரை செய்தியாளர் :
S. பெரியதுரை


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி