தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் 67 லட்சம் பேர்
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர்
67 லட்சம் பேர்
ஆகஸ்ட் 11, 2020 17:34 PM
சென்னை,
ஜூன் மாத இறுதி நிலவரத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களின்படி பள்ளி மாணவர்கள், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள், முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என பல தரப்பிலும் சேர்த்து 67 லட்சத்து 37 ஆயிரத்து 785 பேர் அரசு பணிக்காக காத்து இருக்கின்றனர் என்றும், இவர்களில் 24 முதல் 35 வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 29 ஆயிரத்து 477 பேர் என்றும் வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது .
Comments