யூபிஎஸ்சி தேர்வில் சாதித்த பெண்கள் தொடர் 3

யூபிஎஸ்சி தேர்வில் சாதித்த பெண்கள் தொடர் 3


"திருமணம் தடையல்ல" - தியா


சென்னையை சேர்ந்த 29 வயதான தியாவுக்குயூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற திருமணம் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. முதல் மூன்று முறையும் முதல்நிலை தேர்விலேயே தோல்வியடைந்தாலும் தன் விடா முயற்சியால் இப்போது அகில இந்திய அளவில் 601-வது ரேங்க் பெற்றுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...


image.png

 


"அப்பா-ரமேஷ்அம்மா-ராதாமணி . அப்பாசிறிய அளவில் தொழில் நடத்தி வருகிறார். அம்மா ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அம்மா அதில் ஈடுபடவில்லை. 12-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தேன். நன்றாக படிப்பேன். அதன்பிறகு வேலம்மாள் கல்லூரியில் பொறியியல் படித்தேன். கல்லூரி இறுதியாண்டில் இருந்தே சமூகத்திற்கு சேவையாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என நினைத்ததால் அதற்கு சிவில் சர்வீஸ் தான் சிறந்த வழி என கருதினேன்.


ஆனால்கல்லூரி படிப்புக்குப் பின்னர் வேலை செய்ய வேண்டிய சூழல் எழுந்ததால்பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல வருமானத்தில் பணியில் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்துவிட்டு முழுதாக யூபிஎஸ்சி தேர்வுக்குப் பயிற்சி எடுக்க வேலையை விட்டு விட்டேன். அதற்கு குடும்பம் தான் எனக்கு உறுதுணையாக இருந்தது.


முதல் முறை யூபிஎஸ்சி தேர்வு எழுதினேன். அதில் எனக்கே அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இரண்டாம் முறை தேர்வெழுதும்போது திருமணம் ஆகியிருந்தது. அம்மாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அதனால் என்னால் போதுமான அளவில் பயிற்சிகளை பெற முடியவில்லை. அப்போது மதிப்பெண்களில் போய்விட்டது. மூன்றாம் முறை நன்றாக படித்தேன். வெற்றியடைவோம் என எதிர்பார்த்த நேரத்தில்கேள்வித்தாள் மிகக்கடினமாக இருந்தது. மோசமாக எழுதிவிட்டேன். முதல் இரண்டு முறை பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. அதனால் கஷ்டமாக இல்லை. மூன்றாம் முறைதான் மிகவும் சோர்வாகிவிட்டேன். குடும்பம் நம்பிக்கை அளித்தது. தன்னம்பிக்கை இருந்தது.


மனித நேயம்அறம்சபரி உள்ளிட்ட பயிற்சி அகாடமியில் சேர்ந்து படித்தேன். இப்போது வென்றுள்ளேன். எங்களுடையது காதல் திருமணம் என்பதால் பிரச்சினையில்லை. கணவர் ஜெகந்நாதன் மற்றும் அவருடைய வீட்டில் இருந்தவர்களும் துணையாக இருந்தனர். அதனால்தான் இதனை சாதிக்க முடிந்தது. இல்லையென்றால்திருமணத்திற்குப் பிறகெல்லாம் யூபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொண்டிருக்க முடியாது.


என்னுடைய ரேங்க்குக்கு ஐ.ஆர்.எஸ் கிடைப்பது சந்தேகம் என்கின்றனர். பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வந்ததால்பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடங்கள் குறைந்திருக்கும். அதனால் ஐ.ஆர்.எஸ் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஓ.பி.சி. ரேங்க் பட்டியல் வந்தால் தான் தெரியும். ஐஏஎஸ் பணி பெறுவதற்காக மீண்டும் யூபிஎஸ்சி தேர்வெழுதுவேன்.


கீழே விழுந்தாலும் எழுந்துவிட வேண்டும். இது ஒன்றுதான் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி.


 


குடிமைப் பணியாளராக பெண்கள் முன்னேற்றம்குழந்தைகள் கல்வி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவேன்" என்கிறார்தியா.



  


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி