மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் சென்னை
மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில்
3-வது இடத்தில் சென்னை
நாட்டில் மிக மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில்
3-வது இடத்தில் சென்னை:
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தகவல்
டெல்லி: நாட்டில் மிக மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 3-வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மை நகரங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டின் எந்த நகரமும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிக்க வில்லை. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தூய்மை நகரங்களின் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டார்.
அதன்படி ,மத்திய அரசின் தூய்மை கணக்கெடுப்பில் இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. 2-வது தூய்மையான நகரமாக குஜராத் மாநிலம் சூரத்தும், 3-வது இடத்தில் நவி மும்பையும் இடம்பெறுள்ளது. ஆந்திர மாநில விஜயவாடா 4-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கோவை தூய்மையான நகரங்கள் பட்டியலில் 40-வது இடத்திலும், மதுரை 42-வது இடத்திலும் உள்ளது. தலைநகர் சென்னைக்கு 45-வது இடம் கிடைத்துள்ளது. இதேனிடையே நாட்டிலேயே மோசமான மாசு நகரமாக பீகார் தலைநகர் பாட்னா உள்ளது.
இரண்டாவது இடத்தில் கிழக்கு டெல்லியும் 3-வது இடத்தில் சென்னையும் உள்ளது. 10 லட்சம் பேருக்கும் குறைவான மக்கள் வசிக்கும் நகரங்களில் மோசமான மாசு நகரமாக பீகார் மாநிலம் கயா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் பிக்சர் மற்றும் பஞ்சாப் மாநிலம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

Comments