3.29 நிமிடங்களில் 230 குறள் ஒப்புவிப்பு: குமரி மாணவி
3.29 நிமிடங்களில் 230 குறள் ஒப்புவிப்பு: குமரி மாணவி சாதனை
ஆக 15, 2020
நாகர்கோவில்:குமரி மாவட்ட மாணவி யூதிஷா 3 நிமி
டம் 29 வினாடிகளில் 230 குறள்களை ஒப்புவித்து உலக சாதனை படைத்தார்.
நாகர்கோவில் அருகே சொத்தவிளையை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. மனைவி சாந்தி. இவர்களது மூத்த மகள் யூதிஷா, 13. அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாணவி ஒருவர் 5 நிமிடம் 46 வினாடிகளில் 230 குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்திருந்தார். அதனை மிஞ்சும் வகையில்,
தலைமை ஆசிரியை அகிலாவின் ஊக்குவிப்பால் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் , கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் 230 குறள்களை 3 நிமிடம் 23 வினாடியில் யூதிஷா ஒப்புவித்தார். அவருக்கு உலக சாதனைகளை பதிவு செய்யும் டிரம்ப்' நிறுவனம் சாதனை சான்றிதழை வழங்கியது.
Comments